புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் வரும் புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

கடும் சந்தை நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், சியாஸ் காருக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது மாருதி நிறுவனம். அத்துடன், புதிய எஞ்சின் ஆப்ஷனையும் சேர்த்துள்ளது. தற்போது இந்த கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், வரும் ஜூலை மாதம் முன்பதிவு துவங்குவதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

புதிய மாருதி சியாஸ் காரில் புத்தம் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

டீசல் மாடலிலும் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் தொடர்ந்து பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

புதிய மாருதி சியாஸ் காரில் சிறிய டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில், பம்பர் உள்ளிட்டவற்றை மாற்றி இருக்கிறது மாருதி. புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் அலாய் வீல்கள் முக்கிய மாற்றங்களாக இருக்கும்.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் உதிரிபாகங்கள் அதிக தரமிக்கதாகவும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது. புதிய மாருதி சியாஸ் காரில் எலக்ட்ரிக் சன்ரூஃப் கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களை விற்பனையில் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது மாருதி சியாஸ். இந்த சூழலில், சந்தைப் போட்டியை சமாளிக்க இந்த புதிய மாடல் நிச்சயம் அவசியமானதாக இருக்கிறது. வழக்கம்போல் புதிய மாடல் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
The launch of the 2018 Maruti Ciaz facelift will take place on the first week of August this year. Reports from TOI, have confirmed the timeframe of the launch of the facelift sedan. Bookings for the Ciaz facelift will begin from the end of July 2018.
Story first published: Saturday, May 19, 2018, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X