மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

புதிய மாருதி சியாஸ் செடான் கார் வரும் ஆகஸ்ட் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய மாருதி சியாஸ் செடான் காரின் அறிமுக தேதி குறித்து விபரங்களை வெளியாகி இருக்கின்றன. இந்த காரை வாங்க காத்திருப்போர் தொடர்ந்து செய்தியை படிக்கலாம்.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ் கார்களின் போட்டியை சமாளிக்கும் விதத்தில், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

இந்த நிலையில், இந்த புதிய மாடலின் ஸ்பை படங்கள் அண்மையில் வெளியாகி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது வரும் ஆகஸ்ட் 20ந் தேதி புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

இந்த புதிய மாருதி சியாஸ் காருக்கு சில டீலர்களில் ரகசியமாக முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. குறைந்த முன்பணத்துடன் இந்த முன்பதிவு நடப்பதாகவும் தெரிகிறது. எனினும், வரும் வாரத்தில் இந்த புதிய மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

புதிய மாருதி சியாஸ் காரில் முக்கிய மாற்றமாக முன்புற க்ரில் அமைப்பிலும், பம்பர் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் கூடுதல் சிறப்பம்மாக இருக்கும்.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

உட்புறத்தில் க்ரீம் வண்ணத்திலான உதிரிபாகங்களுடன் பிரிமியமாக காட்சி தருகிறது. மர அலங்கார வேலைப்பாடுகள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் புதிய அம்சங்கள். தற்போது இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியுடன் வருகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

பழைய மாடலில் பயன்படுத்தப்பட்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தொடர்ந்து கிடைக்கும்.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

டீசல் மாடலை பொறுத்தவரையில் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்படும். இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே ஆப்ஷனாக இருக்கும்.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

புதிய மாருதி சியாஸ் காரில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வர இருக்கிறது. இதனால், பாதுகாப்பிலும் சிறந்த மாருதி காராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!!

இந்த புதிய கார் மாருதியின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்லது. மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் தொடர்ந்து விற்பனையில் முதலிடத்தை தக்க வைக்கும் என்று நம்பலாம்.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Maruti Ciaz Facelift Launch Date Details.
Story first published: Tuesday, July 31, 2018, 15:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X