புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மிகச் சிறந்த அம்சங்களுடன் புதிய மாருிதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மிகச் சிறந்த அம்சங்களுடன் புதிய மாருிதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

எல்இடி ஹெட்லைட்

புதிய மாருதி சியாஸ் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகளும் புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய அம்சம். இதன் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் பிஎம்டபிள்யூ கார்களின் டெயில் லைட் போன்ற சாயலை பெற்றிருக்கிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய முகப்பு

புதிய மாருதி சியாஸ் காரின் முகப்பு முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, க்ரில் அமைப்பு, மிக வலிமையான பம்பர் அமைப்புடன் வசீகரமாக மாறி இருக்கிறது. 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களும் மாருதி சியாஸ் காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த புத்தம் புதிய பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்ோடமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

மைல்டு ஹைப்ரிட் நுட்பம்

மாருதி சியாஸ் டீசல் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், புதிய பெட்ரோல் மாடலிலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நின்று கொண்டிருந்தால், எஞ்சின் தானாக அணைந்துவிடும்.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டம்

அதேபோலவே, பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமித்து, மின் மோட்டார் மூலமாக காருக்கு கூடுதல் சக்தியை தரும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த காரில் உள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த மாசு உமிழ்வு திறனையும் இந்த பெட்ரோல் மாடல் பெறுகிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

மின் மோட்டார்

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்திற்காக இந்த காரில் லித்தியம் அயான் பேட்டரியில் பிரேக் சிஸ்டத்தின் இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கப்படுகிறது. மேலும், இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார், கார் வேகமெடுக்கும்போது, காரின் எஞ்சினுக்கு கூடுதல் டார்க் திறனை வழங்கும் விதத்தில் இயங்கும். பிரேக் பிடிக்கும்போது மின் உற்பத்தி ஜெனரேட்டர் போல இயங்கும்.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

டார்க் அசிஸ்ட்

இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் கார் திடீரென வேகம் எடுக்கும்போது கூடுதல் டார்க் திறனை காருக்கு வழங்கும். இதனால், உடனடி பிக்கப் கிடைக்கும். எஞ்சின் மூலமாக அதிக எரிபொருள் சிக்கனத்தையும் பெறும் வாய்ப்பை வழங்குகிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

மேம்படுத்தப்பட்ட இன்டீரியர்

உட்புறத்தில் அலங்கார மரச்சட்டங்களுடன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. கருப்பு- பீஜ் வண்ணக் கலவையிலான இன்டீரியர்ர தீம் பயன்படுத்தப்பட்டு இருக்ககிறது. மேலும், கதவுகள் மற்றும் டேஷ்போர்டுகளில் அதிக தரமான பாகங்கள் கொடுக்கப்ப்டடு இருப்பது பிரிமியமாக தெரிகிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

எம்ஐடி திரை

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோரில் இரண்டு டயல்களுக்கு மத்தியில் 4.2 அங்குல அளவிலான மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஎஃப்டி திரை மூலமாக எவ்வளவு தூரம் பயணிக்கலாம், கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்(மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டும்), எஞ்சின் எரிபொருளை எடுத்துக் கொள்ளும் அளவு உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பெற முடியும்.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

முக்கிய தொழில்நுட்ப வசதிகள்

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் காரை செலுத்துவதற்கான க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், சரியான வெப்பநிலை அளவை தொடர்ந்து தக்கைக்கும் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, வாய்மொழி உத்தரவு மூலமாக சாதனங்களை கட்டுப்படுத்தும் வாய்ஸ் கமாண்ட் வசதி, மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி செல்வதை தடுக்கும் ஹில் ஹோல்டு வசதி, கார் நிலைத்தன்மை குலையாமல் செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல வசதிகளை பெற்றிருக்கிறது.

புதிய மாருதி சியாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

விலை விபரம்

புதிய மாருதி சியாஸ் காரின் பெட்ரோல் மாடல் ரூ.8.19 லட்சத்திலிருந்தும், டீசல் மாடல் ரூ.9.19 லட்சம் ஆரம்ப விலையிலிருந்தும் விற்பனைக்கு கிடைக்கிறது. பழைய மாடலைவிட ரூ.35,000 வரை கூடுதல் விலையில் புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

Variant Petrol Diesel
Sigma Rs 8,19,000 Rs 9,19,000
Delta Rs 8,80,000 Rs 9,80,000
Delta AT Rs 9,80,000 NA
Zeta Rs 9,57,000 Rs 10,57,000
Zeta AT Rs 10,57,000 NA
Alpha Rs 9,97,000 Rs 10,97,000
Alpha AT Rs 10,97,000 NA
Article Published On: Wednesday, August 22, 2018, 12:02 [IST]
English summary
Here are the top features of the new 2018 Maruti Ciaz facelift.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+