தொடர்ந்து 3 மாதமாக நம்பர்-1 இடத்தில் இருக்கிறது மாருதி டிசையர்
தொடர்ந்து 3 வது மாதமாக இந்திய விற்பனை சந்தையில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறது மாருதி டிசையர் கார். இது ஒட்டு மொத்த கார் விற்பனையிலும் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது.
தொடர்ந்து 3 வது மாதமாக இந்திய விற்பனை சந்தையில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறது மாருதி டிசையர் கார். இது அந்த ரக காருக்கான விற்பனையில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கார் விற்பனையிலும் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது.

கடந்தாண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி டிசையர் கார் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்திய அளவில் ஒட்டு மொத்த கார் விற்பனைகளில் முதலிடத்தில் உள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதல் நம்பர் -1 இடத்தில் இருக்கும் மாருதி டிசையர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 20,941 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 16,613 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இதே மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் 3வது இடத்தில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 17,291 ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

மாருதி டிசையரை பொருத்தவரை 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் இன்ஜினுடனும், 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 190 டீசல் இன்ஜினுடனும் கிடைக்கிறது. மேலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் வகைகளிலும் கிடைக்கிறது.

இந்தியா ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்க தகவலின்படி பெட்ரோல் இன்ஜின் கார்கள் லிட்டருக்கு 22 கி.மீ வரையிலும், டீசல் இன்ஜின் கார்கள் லிட்டருக்கு 28 கி.மீ., வரையிலும் மைலேஜ் வழங்குகிறது. இந்த ரக கார்களில் இது தான் அதிக மைலேஜ் தரும் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசூகி நிறுவனம் டிசையர் காரை 12 வகையான வெரியண்ட்களில் தருகிறது. ரூ 5,56,000 முதல் ரூ 9,43,000 வரை (டில்லி எக்ஸ் - ஷோரூம் விலைப்படி) இதன் விலை உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications