புக்கிங்குகளை குவிக்கிறது புதிய மாருதி எர்டிகா கார்!
எதிர்பார்த்தது போலவே புதிய மாருதி எர்டிகா கார் முன்பதிவில் அசத்தி வருகிறது. ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாத காலத்தில் 23,000 முன்பதிவுகளை புதிய மாருதி எர்டிகா
புதிய மாருதி எர்டிகா காருக்கு முன்பதிவு குவிந்து வருகின்றது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் 21ந் தேதி புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த காருக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்பார்த்தது போலவே புதிய மாருதி எர்டிகா கார் முன்பதிவில் அசத்தி வருகிறது. ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாத காலத்தில் 23,000 முன்பதிவுகளை புதிய மாருதி எர்டிகா கார் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பழைய மாருதி எர்டிகா காரைவிட புதிய மாருதி எர்டிகா கார் பரிமாணத்தில் பெரிய காராக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், புத்தம் புதிய டிசைன் அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

உட்புற வடிவமைப்பிலும் முற்றிலும் புதிய மாடலாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மூன்றாவது வரிசை இருக்கையின் இடவசதி மேம்பட்டுள்ளது.

புதிய மாருதி எர்டிகா காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அடிப்படை விலையிலான மாடல்களில் வழங்கப்படுவதும் இதற்கு கூடுதல் வலுசேர்க்கும் அம்சங்கள்.

புதிய மாருதி எர்டிகா காரில் முக்கிய மாற்றமாக 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

ரூ.7.44 லட்சம் என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையும் புதிய மாருதி எர்டிகா காரை வாடிக்கையாளர்கள் மொய்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என்ற பிம்பத்தை தொடர்ந்து புதிய மாருதி எர்டிகா கார் தக்க வைக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications