லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, முன்னணி நிறுவனங்கள், தற்போதே தள்ளுபடியை வழங்க தொடங்கியுள்ளன.

By Arun

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, முன்னணி நிறுவனங்கள், தற்போதே தள்ளுபடியை வழங்க தொடங்கியுள்ளன. மாருதி சுஸூகி நிறுவனமானது, ஸ்விப்ட், பலினோ, ஆல்டோ என பெரும்பாலான கார்களுக்கு தள்ளுபடி வழங்குகிறது. ஹோண்டா நிறுவனமானது, குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து, லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம் அனுப்பவுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

மாருதி சுஸூகி

ஆல்டோ 800 (Alto 800)

ரூ.55 ஆயிரம் வரை தள்ளுபடி

மாருதி சுஸூகி நிறுவனம் மலிவான விலையில் விற்பனை செய்யும் கார்களில் ஒன்று ஆல்டோ 800. சமீப காலமாக, ஆல்டோ 800 காரின் விற்பனை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் மாருதி சுஸூகி நிறுவனமானது ஆல்டோ 800 காருக்கு தற்போது ரூ.55 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

ஆல்டோ 800 காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.25 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட் (Cash Discount) வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் உங்கள் பழைய காரை மாருதி சுஸூகி ட்ரூ வேல்யூ-வில் (True Value), விற்பனை செய்தால் எக்ஸ்சேஞ்ச் போனஸாக (Exchange Bonus) ரூ.30 ஆயிரம் கிடைக்கும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

ஆக மொத்தம் ஆல்டோ 800 காருக்கு ரூ.55 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு உட்பட்ட பழைய கார்களுக்கு மட்டுமே ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காராக இருந்தால், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.20 ஆயிரமாக குறைக்கப்படும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

ஆல்டோ கே10 (Alto K10)

ரூ.62 ஆயிரம் வரை தள்ளுபடி

ஆல்டோ 800 காரின் உடன்பிறப்புகளில் ஒன்றுதான் ஆல்டோ கே10. ஆனால் ஆல்டோ 800 காரை காட்டிலும் பெரிய இன்ஜினை ஆல்டோ கே10 பெற்றுள்ளது. ஆல்டோ கே10 காரில் பொருத்தப்பட்டுள்ள கே10 பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக, 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

5 ஸ்பீடு மேனுவல் (Manual) மற்றும் ஏஎம்டி (AMT) ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ஆல்டோ கே10 காரின் மேனுவல் வேரியண்ட்களுக்கு, ரூ.22 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏஎம்டி வேரியண்ட்கள், ரூ.27 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட்டை பெற்றுள்ளன.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

அத்துடன் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனசும், ஏஎம்டி வேரியண்ட்களுக்கு ரூ.35 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனசும் வழங்கப்படுகிறது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய காராக இருந்தால், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10 ஆயிரம் வரை குறைக்கப்படும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

இக்னிஸ் (Ignis)

ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி

மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே இக்னிஸ் காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால் மேனுவல் மற்றும் ஏஎம்டி என 2 ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. தற்போது இக்னிஸ் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.5 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

இதுதவிர மாருதி சுஸூகி ட்ரூ வேல்யூ-வில் உங்கள் பழைய காரை விற்பனை செய்தால், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கு காரின் வயது ஒரு தடையல்ல. 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய காராக இருந்தாலும் ரூ.25 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

வேகன் ஆர் (WagonR)

ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி

மாருதி சுஸூகி வேகன் ஆர் கார்களின் மேனுவல் வேரியண்ட்களுக்கு தற்போது ரூ.30 ஆயிரம் வரை கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது (சிஎன்ஜி மாடல்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்). அதே நேரத்தில், வேகன் ஆர் காரின் ஏஎம்டி வேரியண்ட்களுக்கு, ரூ.35 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

கூடுதலாக, பெட்ரோல் எம்டி (petrol MT) மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு, ரூ.30 ஆயிரமும், ஏஎம்டி மாடல்களுக்கு ரூ.35 ஆயிரமும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார்களுக்கு, ரூ.10 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் குறைக்கப்படும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

செலிரியோ (Celerio)

ரூ.60 ஆயிரம் வரை தள்ளுபடி

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை (Automated Manual Transmission Technology) இந்தியாவுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்திய காரான மாருதி சுஸூகி செலிரியோ, தற்போது ரூ.60 ஆயிரம் வரையிலான தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

செலிரியோ காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு ரூ.25 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது (பெட்ரோல், சிஎன்ஜி என இரண்டிற்கும்). அதே நேரத்தில் செலிரியோ காரின் ஏஎம்டி வேரியண்ட்கள், ரூ.30 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கின்றன.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

அத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு ரூ.25 ஆயிரமும், ஏஎம்டி மாடல்களுக்கு ரூ.30 ஆயிரமும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார்களுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே எக்ஸ்சேஞ்ச் போனஸாக கிடைக்கும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

ஸ்விப்ட் (Swift)

ரூ.52 ஆயிரம் வரை தள்ளுபடி

மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் காரும் அதிக அளவில்தான் விற்பனையாகி வருகிறது. எனினும் ஸ்விப்ட் காருக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பெட்ரோல் ஸ்விப்ட் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களுக்கு ரூ.27 ஆயிரமும், ரெகுலர் மாடல்களுக்கு ரூ.20 ஆயிரமும் கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

இதுதவிர பெட்ரோல் ஸ்விப்ட் மாடல்களுக்கு ரூ.20 ஆயிரமும், டீசல் ஸ்விப்ட் மாடல்களுக்கு ரூ.25 ஆயிரமும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய காராக இருந்தால், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10 ஆயிரம் வரை குறைக்கப்படும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

டிசையர் (Dzire)

ரூ.57 ஆயிரம் வரை தள்ளுபடி

இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் செடான் வகை கார்களில் ஒன்று டிசையர். ஸ்விப்ட் காருக்கு வழங்கப்படும் அதே கேஸ் டிஸ்கவுண்ட்தான் டிசையர் காருக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் டீசல் மாடல்களுக்கு வழங்கப்படும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மட்டுமே ஒரே ஒரு வித்தியாசம்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

டிசையர் டீசல் மாடலுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஸ்விப்ட் டீசல் மாடலுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஸ்விப்ட் டீசல் மாடலுடன் ஒப்பிடுகையில் டிசையர் டீசல் மாடலுக்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.5 ஆயிரம் அதிகம்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

பலினோ (Baleno)

ரூ.22 ஆயிரம் வரை தள்ளுபடி

மாருதி சுஸூகி நிறுவனம் பலினோ காரை லான்ச் செய்து சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் பலினோ காருக்கு தள்ளுபடி வழங்கப்படுவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். பலினோ காருக்கு ரூ.7 ஆயிரம் கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர எந்த வயதுடைய காராக இருந்தாலும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.15 ஆயிரம் கிடைக்கும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

எர்டிகா (Ertiga)

ரூ.60 ஆயிரம் வரை தள்ளுபடி

மாருதி சுஸூகி எர்டிகா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன் அடுத்த மாதம் லான்ச் ஆகவுள்ளது. எனவே பழைய கார்களை விரைவாக விற்பனை செய்வதற்காக, மாருதி சுஸூகி டீலர்கள், ரூ.60 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

மாருதி சுஸூகி எர்டிகா காரின் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.15 ஆயிரமும், சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு ரூ.10 ஆயிரமும் கேஸ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.25 ஆயிரம் கேஸ் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

அதே நேரத்தில், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு ரூ.30 ஆயிரமும், டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.35 ஆயிரமும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக கிடைக்கும். ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்த போனஸில் ரூ.10 ஆயிரம் வரை குறைக்கப்படும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

ஹோண்டா

ஹோண்டா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், லண்டன் மற்றும் பாரீஸ் சுற்றுப்பயணம் செய்ய அதிர்ஷ்டகரமான வாய்ப்பு காத்திருக்கிறது. ‘The Great Honda Fest' என்ற பெயரில், ஹோண்டா நிறுவனம் இந்த திருவிழாவை நடத்துகிறது.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

அதாவது செப்டம்பர் 1 முதல் நவம்பர் 7ம் தேதி வரை, ஹோண்டா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, லண்டன் மற்றும் பாரீஸ் சுற்றுப்பயணம் அனுப்பப்படுவார்கள். பிரியோ, ஜாஸ், அமேஸ், டபிள்யூ ஆர்-வி, சிட்டி, பிஆர்-வி, சிஆர்-வி என அனைத்து ஹோண்டா கார்களுக்கும் இது பொருந்தும்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

ஆனால் இந்த குலுக்கலில் பங்கேற்க செப்டம்பர் 1 முதல் நவம்பர் 7ம் தேதிக்கு உள்ளாக ஏதேனும் ஒரு ஹோண்டா காரை வாங்கியிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், பில்லிங் மற்றும் டாக்குமெண்டேஷன் முடிந்திருந்தால் கூட போதுமானதுதான். கார் டெலிவரியை நவம்பர் 30ம் தேதிக்குள் பெறுபவர்களாக கூட இருக்கலாம்.

லண்டன், பாரிஸ் சுற்றுப்பயணம், ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி.. மாருதி, ஹோண்டா கார்களுக்கு அதிரடி ஆஃபர்

பின்னர் www.hondacarindia.com என்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் இணைய பக்கத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். இதில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்கள், லண்டன் மற்றும் பாரிஸ் சுற்றுப்பயணம் அனுப்பி வைக்கப்படுவர்.

Most Read Articles

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக, மஹிந்திரா மராஸ்ஸோ கார், சமீபத்தில் லான்ச் செய்யப்பட்டது. அதன் போட்டோ ஆல்பம்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
Maruti Suzuki And Honda Offers Massive Discounts. Read in Tamil
Story first published: Thursday, September 6, 2018, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X