கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. இதற்கு பிரதமர் மோடியும் ஒரு காரணம்..

மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸூகி. 51 சதவீத மார்க்கெட்டை ஷேரை, மாருதி சுஸூகி தன் கைவசம் வைத்துள்ளது. ஆல்டோ, வேகன் ஆர், எகோ, ஸ்விப்ட், டிசையர், பிரெஸ்ஸா, இக்னிஸ், சியாஸ், பலினோ, எஸ் க்ராஸ் உள்பட பல்வேறு மாடல்களை மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறது.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்யும் குறைந்த விலை கொண்ட கார் ஆல்டோ. இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 2.66 லட்ச ரூபாய். அதிக விலை கொண்ட கார் சியாஸ். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 11.86 லட்ச ரூபாய்.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

இந்த சூழலில், மாருதி சுஸூகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவதாக இன்று (ஆகஸ்ட் 16) திடீரென அறிவித்துள்ளது. கார்களின் விலை 6,100 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்து விட்டதாகவும், மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

எனவே இன்று முதல் அனைத்து மாருதி சுஸூகி கார்களும், எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து 6,100 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். உற்பத்தி செலவு அதிகரிப்பு, எரிபொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியும், கார்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாக வரலாறு காணாத வகையில் சரிந்து வருவது கவனிக்கத்தக்கது.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

இதனிடையே மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஃபோர்டு, ஹோண்டா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும், கார்களின் விலையை உயர்த்தி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

இதுதவிர லக்ஸரி கார் நிறுவனங்களான, ஆடி, மெர்சிடிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கார்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. எனவே மாருதி சுஸூகி நிறுவனமும், விரைவில் கார்களை உயர்த்தலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தன.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

இந்த சூழலில், விலை உயர்வு தொடர்பாக மாருதி சுஸூகி நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது. இந்தியாவிலேயே அதிக அளவிலான கார்களை விற்பனை செய்வது மாருதி சுஸூகி நிறுவனம்தான்.

கார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. எவ்வளவு தெரியுமா?

சராசரியாக ஒரு மாதத்திற்கு 1.6 லட்சம் கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்கிறது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் நெருக்கமான போட்டியாளரான ஹூண்டாய், ஒரு மாதத்திற்கு 45,000-50,000 கார்களை மட்டுமே விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Car Prices Increased. Read in Tamil
Story first published: Thursday, August 16, 2018, 18:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X