மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி சியாஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில் எடுக்கப்பட்ட படங்கள் முதல்முறையாக வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி சியாஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில் எடுக்கப்பட்ட அந்த படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

இதுவரை விற்பனையில் இருந்த சியாஸ் காரைவிட புதிய மாடலானது அதிக பிரிமியம் அம்சங்களுடன் வர இருக்கிறது. டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்திலும், மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களிலும் புதிய மாருதி சியாஸ் காருக்கு டீலர்களில் ரகசியமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், பார்க்கிங் லாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த புதிய மாருதி சியாஸ் காரின் படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. புதிய பம்பர் அமைப்பு, தேன்கூடு வடிவ வில்லைகளுடன் மறுவடிவமைப்பு பெற்ற க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகளுடன் காட்சி தருகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

பனி விளக்குகள் அறையானது க்ரோம் அலங்காரத்தில் கவர்கிறது. பக்கவாட்டில் வலிமையான பாடி லைன்கள், புதிய அலாய் வீல்கள் முக்கிய அம்சமாக இருக்கின்றன. புதிய டெயில் லைட்டுகள் க்ளஸ்ட்டரும் பார்க்க படுகவர்ச்சியாக தெரிகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

உட்புறத்தில் க்ரீம் கலரில் உட்புறம் கொடுக்ககப்பட்டு இருக்கிறது. மர அலங்கார வேலைப்பாடுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய மாருதி சியாஸ் காரில் மிக முக்கிய மாற்றமாக, புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெட்ரோல் மாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதை உணர முடிகிறது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய மாருதி சியாஸ் காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக கொடுக்கப்படும் என்று தெரிகிறது. முன்பைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய மாருதி சியாஸ் கார் தொடர்ந்து விற்பனையில் முன்னிலை வகிக்கும் என்று நம்பலாம்.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள்!

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். அடுத்த மாதம் மாருதியின் நெக்ஸா பிரிமியம் கார் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autoportal

Most Read Articles
English summary
Maruti Suzuki India is the largest car manufacturer in the country. Next month, the manufacturer is expected to launch the much-awaited 2018 Maruti Ciaz facelift. The mid-size sedan's updated version has been totally revealed in the spy images which was clicked by Autoportal.
Story first published: Saturday, July 28, 2018, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X