2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டார்ம் 2018 ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

விறுவிறுப்பாக நடந்த மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தயம் நிறைவு பெற்றுள்ளது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரங்களை இங்கே காணலாம்.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

இந்தியாவின் மிக சவாலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தயம் கருதப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பந்தயம் 16வது முறையாக இந்த ஆண்டு தார் பாலைவனத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு போட்டிக்கு எக்ஸான்மொபில் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2018 மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டாரம் ராலி பந்தயத்தில் இந்த முறை 140 போட்டியாளர்கள் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தயத்தில் 5 முறை வெற்றி பெற்ற சுரேஷ் ராணா மற்றும் டக்கார் ராலியில் பங்கு கொண்ட அனுபவம் வாய்ந்த சிஎஸ்.சந்தோஷ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

கடந்த வாரம் நொய்டாவில் துவக்க விழா நடந்தது. இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே போட்டியின் முதல் நிலை துவங்கியது. மொத்தம் 2,000 கிமீ தூரத்திற்கு மிக கடுமையான நிலப்பரப்புகளையும், சீதோஷ்ண நிலைகளையும் கடக்கும் விதத்தில் பந்தயத்தின் நிலைகள் வரையறுக்கப்பட்டன.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

எக்ஸ்ட்ரீம், மோட்டோ, என்டியூர் மற்றும் எக்ஸ்ப்ளோர் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வீரர்கள் களமிறங்கினர். இதில், எக்ஸ்ப்ளோர் பிரிவில் விருப்பப்பட்ட ஒன்று அல்லது இரண்டு நிலைகளில் மட்டும் வீரர்கள் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

வீரர்கள் வழக்கமான உற்சாகத்துடன் இந்த போட்டியில் கடும் சவால்களை எதிர்கொண்டு கடந்தனர். 6 நாட்கள் பல்வேறு நிலைகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 3வது நிலையின்போது சிஎஸ்.சந்தோஷ் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

இந்த போட்டியின் முடிவில் எக்ஸ்ட்ரீம் பிரிவில் அபிஷேக் மிஷ்ரா மற்ரும் கோ - டிரைவர் ரமேஷ் குமார் ஜோடி வெற்றி பெற்றது. ராஜ் சிங் ரத்தோர் மற்றும் சாகர் மல்லப்பா ஜோடி இரண்டாவது இடம் பிடித்தது. நிஜு பாடியா மற்றும் நிரவ் மேத்தா ஜோடி மூன்றாவது இடத்தை பெற்றது.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

இதேபோன்று, மோட்டோ பிரிவில் அன்கதா ரேஸிங் வீரர் ஆரோன் மேர் முதலிடத்தையும், டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் லாரென்ஸோ சான்டோலினோ இரண்டாவது இடத்தையும், அன்கதா ரேஸிங் அணியின் மற்றொரு வீரர் சஞ்சய் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

என்டியூர் பிரிவில் ஆசிஷ் புதியா மற்றும் கோ டிரைவர் அரிந்தம் கோஷ் ஜோடி முதலிடத்ததை பெற்றது. எக்ஸ்ப்ளோர் பிரிவில் நிபுன் அகர்வால் மற்றும் கோ டிரைவர் கபீர் மன்ஷரமணி இணை முதலிடத்தை பிடித்தது.

More from DriveSpark

Article Published On: Monday, March 26, 2018, 12:03 [IST]
English summary
Maruti Suzuki Desert Storm 2018 Powered By ExxonMobil: Final Results
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+