போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10 பட்டியலில் முதல் 5 இடங்கள் உள்பட மொத்தம் 6 இடங்களை பிடித்து, மாருதி சுசூகி நிறுவனம் அசத்தியுள்ளது.

By Arun

2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10 பட்டியலில் முதல் 5 இடங்கள் உள்பட மொத்தம் 6 இடங்களை பிடித்து, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM-Society of Indian Automobile Manufacturers), கடந்த ஜுன் மாதம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளி விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

SIAM அமைப்பு வெளியிட்டுள்ள டாப்-10 பட்டியலில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் 6 கார்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் 3 கார்களும், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் 1 காரும் இடம்பெற்றுள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், 18,758 டிசையர் கார்களை மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் டாப்-10 பட்டியலில் டிசையர் முதலிடம் பிடித்துள்ளது. இது காம்பேக்ட் செடான் வகை கார் ஆகும்.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

இதே கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 12,050 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில், டிசையர் கார்களின் விற்பனை 18,758ஆக அதிகரித்துள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

இந்த பட்டியலில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் வகை காரான ஸ்விப்ட், 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18,171 ஸ்விப்ட் கார்களை மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 9,902 ஸ்விப்ட் கார்களை மட்டுமே மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில், டிசையர் காரை போலவே, ஸ்விப்ட் காரின் விற்பனையும் 18,171ஆக உயர்ந்துள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் 3வது இடம் மாருதி ஆல்டோ காருக்கு கிடைத்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18,070 ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 14,856 ஆல்டோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஆனால் டிசையர், ஸ்விப்ட் கார்களின் வரிசையில் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் வகை காரான ஆல்டோவின் விற்பனையும் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 18,070ஆக உயர்ந்துள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

எனினும் கடந்த ஜூன் மாதத்தில், டிசையர் மற்றும் ஸ்விப்ட் ஆகிய கார்கள், ஆல்டோவை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் ஆல்டோவை பின்னுக்கு தள்ளி, டிசையர் மற்றும் ஸ்விப்ட் கார்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில், மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் வகை காரான பலினோ 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 17,850 பலினோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 9,057 பலினோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதனால் அந்த சமயத்தில் பலினோ, 7வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 4வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது பலினோ.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் 5வது இடத்தை வேகன் ஆர் பிடித்துள்ளது. இதுவும் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்தான். கடந்த ஜூன் மாதம் மொத்தம் 11,311 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

இதே கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம், வேகன் ஆர் கார் 4வது இடத்தை பிடித்திருந்தது. அப்போது வெறும் 10,668 வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஆனால் தற்போது 11,311 என எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், 5வது இடத்திற்கு வேகன் ஆர் பின்தள்ளப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

இந்த பட்டியலில் 6வது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11,262 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதே நிறுவனத்தின் எஸ்யூவி வகை காரான கிரெட்டா, 7வது இடத்தை பிடித்துள்ளது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11,111 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 8வது இடத்தை மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா பெறுகிறது. மொத்தம் 10,713 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகியுள்ளன.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

ஹூண்டாய் நிறுவனத்தின் காம்பேக்ட் ஹேட்ச்பேக் வகை காரான கிராண்ட் ஐ10 கார், 9வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 10,343 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கிராண்ட் ஐ10 கார் 2வது இடத்தை பிடித்திருந்தது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

அப்போது மொத்தம் 12,317 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 10,343 கிராண்ட் ஐ10 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதனால் 2வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு பின்தங்கி விட்டது கிராண்ட் ஐ10.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

அதே சமயம் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில், 10வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை காம்பேக்ட் செடான் வகை காரானா அமேஸ் பிடித்திருக்கிறது.

போட்டியாளர்களை வூடு கட்டி அடிக்கும் மாருதி சுசூகி.. டாப் 10ல் முதல் 5 இடங்களை அள்ளியது..

மொத்தம் 9,103 அமேஸ் கார்களை, ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான டாப் 10 கார்களின் பட்டியலில் அமேஸ் இடம்பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Dominates in Top 10 List. Read in tamil
Story first published: Saturday, July 21, 2018, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X