மாருதி டிசையர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாருதி டிசையர் காரின் பேஸ் மாடலில் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பவர் விண்டோ, வீல் கவர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், புளுடூத் வச
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாருதி டிசையர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி டிசையர் காரின் எல்எக்ஸ்ஐ மற்றும் எல்டிஐ ஆகிய பெட்ரோல், டீசல் மாடல்களின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்ந்து இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வந்துள்ளன.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பவர் விண்டோ, வீல் கவர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன. புளுடூத் வசதியுடன் மியூசிக் சிஸ்டம், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் நிரந்ததமாக இடம்பெற்றுள்ளன.

மாருதி டிசையர் பெட்ரோல் மாடலில் 82 பிஎச்பபி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர்எ எஞ்சினுடன் கிடைக்கிறது. டீசல் மாடலில் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

மாருதி டிசையர் ஸ்பெஷல் எடிசன் மாடலின் பெட்ரோல் வேரியண்ட் ரூ.5.56 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.56 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். சாதாரண எல்எக்ஸ்ஐ மற்றும் எல்டிஐ வேரியண்ட்டுகளைவிட ரூ.30,000 கூடுதல் விலையில் மேற்கண்ட கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

மாருதி டிசையர் காரின் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் மிக சவாலான விலையில் கிடைப்பதால், வாடிக்கையாளர்களுக்கு சரியான பட்ஜெட்டில் சிறந்த தேர்வாக அமையும். ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட், ஃபோர்டு ஆஸ்பயர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications