TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
5 லட்சம் எகோ மினிவேன்கள் விற்பனை.. புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி..
5 லட்சம் எகோ மினிவேன்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, எகோ எம்பிவி (Eeco MPV) ரக வாகனத்தை, கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் எம்பிவி ரக வாகனமாக எகோ உள்ளது.
இதனால் இதன் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது புதிய மைல்கல் ஒன்றை மாருதி சுஸுகி எகோ எம்பிவி எட்டியுள்ளது. 5 லட்சம் எகோ எம்பிவி வாகனங்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல். இந்த சாதனையை படைக்க எகோ எம்பிவி 8 ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பெரும்பாலான அம்சங்கள் மாருதி சுஸுகி எகோ மினிவேனில் உள்ளன. அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் முதல் தேர்வாக மாருதி சுஸுகி எகோ மினிவேன்தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
மாருதி சுஸுகி எகோ மினிவேனில் ஏறி, இறங்குவது என்பது மிகவும் எளிமையான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர தொழில் ரீதியாகவும் எகோ மினிவேன்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இதில், அதிகப்படியான சுமையையும் எடுத்து செல்லலாம் என்பது மற்றொரு சிறப்பம்சம்.
மாருதி சுஸுகி எகோ எம்பிவி வாகனமானது, 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. எகோ மினிவேனில் 540 லிட்டர்கள் கொண்ட மிகப்பெரிய பூட் ஸ்பேஸை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.
மாருதி சுஸுகி எகோ மினி வேனில் பொருத்தப்பட்டுள்ள 1,200 சிசி பெட்ரோல் இன்ஜின், 69 பிஎச்பி பவரையும், 101 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளது.
MOST READ: கார் உரிமையாளரிடம் நூதன முறையில் 1.09 லட்ச ரூபாயை சுருட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. உஷார்
இதுதவிர சிஎன்ஜி வேரியண்ட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த எகோ மினிவேன்களில் 17 சதவீதம் சிஎன்ஜி வேரியண்ட்கள்தான் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். சிஎன்ஜி வேரியண்ட்களில் லிட்டருக்கு 21.8 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.
அதே நேரத்தில் பெட்ரோல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 16.2 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகின்றன. மாருதி சுஸுகி எகோ மினிவேனானது இந்தியாவில், 3.65 லட்சம் முதல் 4.73 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், பெங்களூரு) வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மாருதி சுஸுகி எகோ மினி வேனின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.