கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சீக்கிரம் வாங்குங்க...!

ஹூண்டாய் கார் நிறுவனம் ஏற்கனவே ஜூன் மாதம் தங்கள் நிறுவன கார்களுக்கான விலையேற்றத்தை அறிவித்திருந்த நிலையில், மாருதி சுஸூகி நிறுவனமும் தங்கள் கார்களுக்கான விலையை ஏற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Balasubramanian

ஹூண்டாய் கார் நிறுவனம் ஏற்கனவே ஜூன் மாதம் தங்கள் நிறுவன கார்களுக்கான விலையேற்றத்தை அறிவித்திருந்த நிலையில், மாருதி சுஸூகி நிறுவனமும் தங்கள் கார்களுக்கான விலையை ஏற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைதொடர்ந்து மற்ற நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்து வருவது மாருதி சுஸூகி நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் கார்கள் குறைந்த விலையில் அதிக வசதிகளும், நல்ல லுக் மாடல் கார்களாக கிடைப்பதால் மக்கள் அதிகம் பேர் இதை விரும்புகின்றனர்.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

இந்தியாவில் தொடர்ந்து மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் தான் நம்பர் 1 காராக திகழ்கிறது. இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவன வாடிக்கையாளர்களுக்க அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாருதி சுஸூகி கார்களுக்க விலையேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

இதன் படி நாளை (ஜூன்1) முதல் இந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுஸூகி கார்களுக்கு 2 சதவீதம் அல்லது ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ 25000 வரை மாடலுக்கு தகுந்த படி விலையேற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

எனினும் டீலர்களுக்கு இந்த தகவல் சொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. விலையேற்றத்திற்கான சரியான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. உதிரிபாகங்கள் விலையேற்றம் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியன காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உதிரிபாகங்கள் இறக்குமதி வரியும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

இந்த விலையேற்றம் மாருதி ஆல்டோ, செலிரியோ, வேகன் ஆர், ஸ்விபட், டிசையர், விட்டாரா, ப்ரிஸ்ஸா, உள்ளிட்ட அனைத்து கார்களுக்கும் இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிறுவனம் நெக்ஸா என்னும் செயின் டீலர்ஸ் நிறுவனம் மூலம் தான் அதிக கார்களை விற்பனை செய்து வருகிறது.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

தற்போது தான் இந்நிறுவனம் 3வது தலைமுறை மாருதி ஸ்விப்ட் காரை அறிமுகப்படுத்தியது. அந்த கார் மக்கள் மத்தியில் அறிமுகமாகி நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இந்தவிலை உயர்வு முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் இந்தாண்டே இந்நிறுவனம் புதிய எர்டிகா, சியாஸ் பேஸ்லிப்ட், புதிய தலைமுறை வேகன் ஆர் ஆகிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளன.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

ஜூன் மாதம் மாருதி மட்டும்அல்ல ஹூண்டாய் நிறுவனம் 2 சதவீத விலை உயர்வை அறிவித்திருந்தது. இதற்கும் கார் தயாரிப்பு செலவு அதிகமாக இருத்தல், மற்றும் பெட்ரோல் விலை அதிகமானதால் போக்குவரத்து செலவு அதிகம் ஆகிறது என காரணம் சொல்லப்பட்டது. தற்போது அதேநிலைப்பாடை தான் மாருதி சுஸூகி நிறுவனமும் எடுத்துள்ளது.

கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சிக்கிரம் வாங்குங்க...!

தற்போது இரண்டு கார் நிறுவனங்கள் விலையேற்றம் அறிவித்துள்ளன நிலையில் அதே காரணங்கள் மற்ற கார் நிறுவனங்களுக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் அதனால் விரைவில் அந்த கார்கள் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, May 31, 2018, 18:01 [IST]
English summary
Maruti Suzuki To Hike Prices By Up To 2 Percent. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+