லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

சாதாரண பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரியை கார்களில் பயன்படுத்துவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பெரும் முதலீட்டில் லித்தியம் அயான் பேட்டரி உற்பத்தி ஆலையை குஜராத்தில்

By Saravana Rajan

சாதாரண பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரியை கார்களில் பயன்படுத்துவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பெரும் முதலீட்டில் லித்தியம் அயான் பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவும் முயற்சியில் மாருதி இறங்கி இருக்கிறது.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

குஜராத்தில் உள்ள சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய கார் ஆலையை ஒட்டியே இந்த புதிய பேட்டரி ஆலையும் அமைக்கப்பட இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த தோஷிபா மற்றும் டென்ஸோ கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த புதிய பேட்டரியை ஆலையை சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவ இருக்கிறது. இந்த ஆலை ரூ.1,152 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

தற்போது கார்களில் பயன்படுத்தப்படும் லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. மாருதி ஸ்விஃப்ட் மற்றும் அதற்கு மேலான ரகத்தில் அந்த நிறுவனம் விற்பனை செய்யும் பிரிமியம் ரக கார்களில் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படும்.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

சாதாரண லீட் ஆசிட் பேட்டரியைவிட லித்தியம் அயான் பேட்டரிகள் விரைவாக சார்ஜ் ஆகும். மேலும், அதிக நேரம் மின்சாரத்தை வழங்கும் திறனை பெற்றிருப்பதோடு, அதிக ஆயுட்காலத்தை பெற்றிருக்கிறது. குறைந்தது 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை லித்தியம் அயான் பேட்டரிகள் பெற்றிருக்கின்றன.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஹைப்ரிட் கார்களில் இந்த பேட்டரியை பயன்படுத்த முடியும். அதேபோன்று, ஓரிரு ஆண்டுகளில் புதிய மின்சார கார்களை களமிறக்க மாருதி முடிவு செய்துள்ளது. முதலாவதாக மாருதி வேகன் ஆர் மின்சார மாடல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பேட்டரியில் இயங்கும் தனது மின்சார கார்களுக்கு தேவைப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளை இந்த ஆலையிலிருந்து சப்ளை பெறுவதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

மறுபுறத்தில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் 2020ம் ஆண்டு இந்தியாவில் மின்சார மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனங்களுக்கு தேவைப்படும் லித்தியம் அயான் பேட்டரியும் இந்த ஆலையிலிருந்து சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

தற்போது லித்தியம் அயான் பேட்டரிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், சாதாரண லீட் ஆசிட் பேட்டரியைவிட லித்தியம் அயான் பேட்டரிகள் விலை அதிகம் என்ற நிலை இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே சுஸுகி நிறுவனம் லித்தியம் அயான் பேட்டரிகளை உற்பத்தி செய்ய இருப்பதால், விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

லீட் ஆசிட் பேட்டரி ரூ.10,000 முதல் ரூ.12,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள் ரூ.16,000 முதல் ரூ.17,000 வரையிலான விலையில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். ஆயுட்காலம் அதிகம் என்பதுடன், அதிக திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரிக்காக சில ஆயிரங்கள் வித்தியாசத்தில் வழங்குவதற்கு சுஸுகி திட்டமிட்டுள்ளது.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

மேலும், லீட் ஆசிட் பேட்டரி பயன்பாட்டை வாகனங்களிலிருந்து விலக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தற்போது லீட் ஆசிட் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களுக்கான மானியத்தை ஃபேம் திட்டத்தின் கீழ் வழங்குவதை நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

லித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்!

லீட் ஆசிட் பேட்டரியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், லித்தியம் அயான் பேட்டரியை பயன்படுத்துவது சிறந்ததாக சுஸுகி நிறுவனம் கருதுகிறது. குஜராத்தில் அமையும் சுஸுகி நிறுவனத்தின் புதிய லித்தியம் அயான் பேட்டரி ஆலை 2020ம் ஆண்டு முதல் செயல்பட துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source:Livemint

Article Published On: Tuesday, July 17, 2018, 10:36 [IST]
English summary
Maruti Suzuki will replace the lead batteries to lithium-ion in its premium cars by FY2021. All models above the Swift hatchback will get lithium-ion batteries in the future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+