யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி நிறுவனம் கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

யாரும் எதிர்பாராத வகையில், மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விற்பனை, கடந்த ஜூலை மாதத்தில் திடீரென சரிவை சந்தித்துள்ளது.

By Arun

யாரும் எதிர்பாராத வகையில், மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விற்பனை, கடந்த ஜூலை மாதத்தில் திடீரென சரிவை சந்தித்துள்ளது. இந்த பின்னடைவு குறித்தும், இதில் இருந்து மாருதி சுஸூகி நிறுவனம் மீண்டு வருமா? என்பது குறித்தும், இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான, மாருதி சுஸூகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) வெளியிடப்பட்டது. மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்தமாக 1,64,369 கார்களை விற்பனை செய்துள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

இதன்மூலம் இந்தியாவில் அதிக அளவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸூகி தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஆனால் மாருதி சுஸூகி நிறுவன கார்களின் விற்பனை சற்றே சரிவை சந்தித்திருக்கும் விஷயம் அனைவரின் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

மாருதி சுஸூகி நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,65,346 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 1,64,369 கார்களை மட்டுமே மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

அதாவது 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், மாருதி சுஸூகி நிறுவன கார் விற்பனை 0.6% சரிவடைந்துள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வளர்ச்சி கண்டு வந்த மாருதி சுஸூகி, தற்போது சற்றே சரிவை சந்தித்துள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

எனினும் உள்நாட்டு விற்பனையில், மாருதி சுஸூகி 0.1% முன்னேற்றமடைந்துள்ளது. 2018ம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டில், 1,54,150 கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டில் 1,54,001 கார்களை மட்டுமே மாருதி சுஸூகி விற்பனை செய்திருந்தது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

மாருதி சுஸூகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சற்றே அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதி 9.9% அளவிற்கு சரிவடைந்துள்ளது. 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 11,345 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 10,219 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்களுக்கு டிமாண்ட் உள்ளதால், வெயிட்டிங் பீரியட் அதிகமாகவேதான் உள்ளது. அப்படி இருந்தும் ஏன் இந்த சரிவு? என்பதற்கான தெளிவான விடை தற்போதைக்கு கிடைக்கவில்லை.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

மினி செக்மெண்ட்டை (ஆல்டோ, வேகன் ஆர்) எடுத்து கொண்டாலும், மாருதி சுஸூகி நிறுவனம் 10.9% அளவிற்கு பின்னடைவையே சந்தித்துள்ளது. ஏனெனில், 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 42,310ஆக இருந்த இந்த கார்களின் விற்பனை, 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 37,710ஆக சரிவடைந்துள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

அதே நேரத்தில் காம்பேக்ட் செக்மெண்ட் (ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலினோ, டிசையர், டூர் எஸ்) மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு ஆறுதல் அளித்துள்ளது. ஏனெனில் காம்பேக்ட் செக்மெண்டில், மாருதி சுஸூகி நிறுவனம் 17.8 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், காம்பேக்ட் செக்மெண்டில் ஒட்டுமொத்தமாக 63,116 கார்களை மட்டுமே மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதம், காம்பேக்ட் செக்மெண்டில், 74,373 கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

எனினும் யுடிலிட்டி வெய்கில் செக்மெண்ட் (ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டார பிரெஸ்ஸா), மாருதி சுஸூகி நிறுவனத்தின் காலை வாரி விட்டுள்ளது. ஏனெனில், யுடிலிட்டி வெய்கில் செக்மெண்டில், மாருதி சுஸூகி நிறுவனம் 4.9% அளவிற்கு சரிவை கண்டுள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

ஏனெனில் மாருதி சுஸூகி நிறுவனம், யுடிலிட்டி செக்மெண்டில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 25,781 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 24,505 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு மிகப்பெரும் சரிவு, மிட் சைஸ் செக்மெண்ட்டில்தான் (சியாஸ்). கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 6,377 சியாஸ் கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 48 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

இது 99.2% அளவிற்கான சரிவாகும். ஆனால் இதற்கு காரணம் உள்ளது. சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை லான்ச் செய்ய மாருதி சுஸூகி தயாராகி வருகிறது. தற்போது ஸ்டாக்கில் உள்ளவற்றை மட்டுமே டீலர்கள் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யானைக்கு அடி சறுக்கியது.. திடீர் பின்னடைவால் மாருதி சுஸூகி கலக்கம்.. போட்டியாளர்கள் ஹேப்பி

இதனிடையே மாருதி சுஸூகி நிறுவனம், ஆல் நியூ சியாஸ் காரை வரும் 20ம் தேதி லான்ச் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின் நியூ ஜென்ரேஷன் எர்டிகா மற்றும் வேகன் ஆர் கார்களை, தீபாவளி பண்டிகையின்போதும் களமிறக்க மாருதி சுஸூகி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய லான்ச்கள், மாருதி சுஸூகி நிறுவனத்தின் விற்பனையை உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki Sales Report for 2018 July. Read in Tamil
Story first published: Wednesday, August 1, 2018, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X