ஒரு லட்சம் புக்கிங் எண்ணிக்கையை நோக்கி நகரும் புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்... வரலாற்று சாதனை

ஒரு லட்சம் புக்கிங் எண்ணிக்கையை நோக்கி நகரும் புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்... வரலாறு காணாத சாதனை..!!

By Azhagar

இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2018 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகமானதை தொடர்ந்து, அதற்கான புக்கிங் இந்தியளவில் குவிந்து வருகிறது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

இந்திய வாடிக்கையாளர்களின் அபிமானத்திற்குரிய மாருதி சுஸுகியின் 3வது தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது.

இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). புதிய ஸ்விஃப்ட் காரை இதுவரை 60,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

விற்பனைக்கு அறிமுகமான நாளிலிருந்து, அடுத்த மார்ச் 14ம் தேதி வரைக்குள் புதிய ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

இந்தியளவில் இந்த காருக்கான முன்பதிவு ஜனவரி மாதம் தொடங்கியது. தொடர்ந்து இதற்கான காத்திருப்பு காலம் ஆறு முதல் எட்டு வாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

சமீபத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய ஸ்விஃப்ட் காருக்கான விநியோகம் தொடங்கிய நிலையில், தற்போது இந்த கார் இந்தியாவில் வெற்றி மாடல் என்ற பெயரை பெற்றுள்ளது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

மாருதி சுஸுகி கடந்த மாதம் மட்டும் சுமார் 15,000 பழைய ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய மாடலை விட இந்த புதிய மாடல் கூடுதலாக ரூ. 20,000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

இந்த கூடுதல் விலைக்கு ஏற்ப மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் காரில் மேம்படுத்தப்பட்ட செயல்திறன், இந்திய சாலைகளுக்கு ஏற்ற கட்டுமானம், அதற்கேற்ற கூடுதல் மைலேஜ் வழங்குகிறது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

3840மிமீ நீளம், 1735மிமீ அகலம், 1530மிமீ உயரம், 2450மிமீ வீல்பேஸ் மற்றும் 135 கிரவுண்டு கிளியரஸ் ஆகிய அளவீட்டில் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் தயாராகியுள்ளது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

தற்போதைய ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே செயல்திறன் தான் இந்த புதிய தலைமுறை காரிலும் உள்ளன. 1.2 லிட்டர் கே12 பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் டிடிஐஎஸ் ஆகிய எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் தயாராகியுள்ளது.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

இதன்மூலம் பெட்ரோல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 83 பிஎச்பி பவர் மற்றும் 140 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல டீசல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

புதிய ஸ்விஃப்ட் காரின் வேரியன்டுகள் அனைத்திலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் சில குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

புதிய ஸ்விஃப்ட் காரின் உள்கட்டமைப்பில் உள்ள 7 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 3 ஸ்போக் உடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

மேலும் பாதுகாப்பு தேவைகளுக்காக டூயல் ஏர்பேகுகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, பிரேக் அசிஸ்ட், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆகிய அம்சங்கள் புதிய ஸ்விஃப்ட் காரின் எல்லா வேரியன்டுகளிலும் உள்ளன.

இந்தியாவில் 60,000 முன்பதிவுகளை பெற்ற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்..!!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Read in Tamil: Maruti Suzuki New Swift Car 60000 Bookings New Record. Click for Details...
Story first published: Saturday, February 24, 2018, 18:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X