இந்தியாவில் ஸ்விஃப்ட் ஆர்.எஸ் ஹைஃப்ரிட் காரை வெளியிட மாருதி சுஸுகி ஆயத்தம்..!!
இந்தியாவில் ஸ்விஃப்ட் ஆர்.எஸ் ஹைஃப்ரிட் காரை வெளியிட மாருதி சுஸுகி ஆயத்தம்..!!
2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
தற்போது இதன் ஹைஃபிர்ட் திறன் பெற்ற ஸ்விஃப்ட் ஆர்எஸ் காரை இந்தியாவில் வெளியிட மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளதாக மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஸ்விஃப்ட் ஆர்.எஸ் ஹைஃபிரிட் கார் வெளிநாட்டில் பல சந்தைகளில் விற்பனையாகி வரும் நிலையில், விரைவில் இந்தியாவில் இது களமிறங்கவுள்ளது.
இந்தியாவில் மின்சார கார்கள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே இந்த ஹைஃபிரிட் ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

மின்சார வாகனங்களை போலவே, ஹைஃப்ரிட் ரக வாகனங்களை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்கள் பெரிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை மனதில் வைத்து தான் மின்சார கார் பயன்பாடு இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்னர் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹைஃப்ரிட் ஆர்.எஸ் கார் களமிறங்குகிறது.

மாருதி சுஸுகி இந்தியாவின் செயல் இயக்குநர் சிவி ராமன் பேசும்போது, தற்போது நம் நாட்டில் மின்சார காருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஹைஃப்ரிட் கார் பயன்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. அதை பொறுத்து விரைவில் மாருதி சுஸுகி முடிவை அறிவிக்கும் என்றார்.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஸ்விஃப்ட் ஆர்.எஸ். ஹைஃப்ரிட் கார் மைல்டு-ஹைஃபிர்ட் சிஸ்டம் உள்ளது. SHVS (Suzuki Hybrid Vehicle System) என்ற அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் மின்சார மோட்டாரையும் பெற்றிருக்கும்.

எஸ்.ஹெச்.வி.எஸ் தொழில்நுட்பம் காருக்கு எரிவாயு திறனை அதிகரித்து தருவதோடு, காற்று மாசு ஏற்படுத்தும் நச்சுப்புகை உருவாக்கத்தையும் குறைக்கிறது.
முற்றிலும் ஹைஃபிரிட் திறன் பெற்ற கார்களை விட SHVS தொழில்நுட்பத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என மாருதி சுஸுகி கூறியுள்ளது.

இந்தியாவில் எர்டிகா எம்பிவி மர்றும் சியாஸ் செடான் போன்ற கார்களும் எஸ்விஹெச்எஸ் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் மாருதி சுஸுகியின் மூன்றாவது கார் தான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆர்.எஸ் ஹைஃப்ரிட் கார்.

தற்போது விற்பனையில் உள்ள புதிய ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இதில் SHVS தொழில்நுட்பத்தை ஏற்கும் பெட்ரோல் வேரியன்டிற்கு அது பெரிய பாதிப்பை வழங்காது.

புதிய ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் ஹைஃப்ரிட் மாடல் லிட்டருக்கு 32 கி.மீ மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இது டீசல் எஞ்சின் ஸ்விஃப்ட் கார் தரும் லிட்டருக்கு 28.4 கி.மீ மைலேஜ் அளவை விட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் சிறந்த விற்பனை திறனை பெற்றுள்ள மாடல். தற்போது புதியதாக வெளியான மூன்றாவது தலைமுறை மாடல் மூலம் மேலும் அதன் விற்பனை சூடு பிடித்துள்ளது.

எஸ்விஹெச்எஸ் தொழில்நுட்பம் மூலம் தற்போது வெளிவரும் ஸ்விஃப்ட் ஆர்.எஸ். ஹைஃப்ரிட் கார் எதிர்கால வாகன சந்தைக்கான முக்கிய தயாரிப்பாக அமையும்.


Click it and Unblock the Notifications








