TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
மாருதி கார்களுக்கான புதிய டிராக்கிங் சாதனம் அறிமுகமாகிறது!!
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்குடன் புதிய டிராக்கிங் சாதனம் ஒன்றை மாருதி கார் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சாதனம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
சுஸுகி கனெக்ட் என்ற பெயரில் இந்த புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த சாதனத்திற்கான பிரத்யேக செயலி மூலமாக ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் சாதனங்களில் இந்த புதிய ஆப்பை நிறுவிக்கொள்ளலாம்.
இந்த புதிய மொபைல்போன் ஆப் மூலமாக மாருதி கார் வாடிக்கையாளர்கள் ஏராளமான சேவைகளை பெற முடியும். அருகிலுள்ள டீலர்கள், சர்வீஸ் மையங்களை கண்டறிவது, சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவு, கார் பராமரிப்பு உள்ளிட்டவற்றை இந்த மொபைல்போன் ஆப் மூலமாக பெற முடியும்.
அவசர காலங்களில் அருகிலுள்ள மாருதி சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு உதவி பெறுவதற்கும் இந்த மொபைல் ஆப் உதவிகரமாக இருக்கும். கார் பேட்டரி கண்டிஷன், காரில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிவது, சர்வீஸ் இடைவெளி குறித்த நினைவூட்டல் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழங்கும்.
பெரிய கார் பார்க்கிங் வளாகங்களில் கார் எங்கு நிற்கிறது என்பதையும் இந்த மொபைல்போன் ஆப் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். பெரும்பாலான மாருதி கார் மாடல்களுக்கு இந்த மொபைல் ஆப் மூலமாக சேவை வழங்கப்பட இருக்கிறது.
போக்குவரத்து நிலை குறித்த தகவல்களையும், வழிகாட்டுத் தகவல்களையும் கூட பெற முடியும். மொத்தத்தில் இந்த புதிய மொபைல் ஆப் மூலமாக மாருதி வாடிக்கையாளர்கள் பெரும் பயன் பெற முடியும் என்று மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த மொபைல் ஆப் வெளியிடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதற்காக பிரத்யேக சாதனத்தையும் மாருதி கார் நிறுவனம் வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆப் மூலமாக மாருதி கார் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளை பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு உள்ளது.
Source:Gaadiwaadi