புதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்!!
பட்ஜெட் கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் மாருதி கார் நிறுவனம் அடுத்து ஒரு புதிய பட்ஜெட் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாருதியின் புதிய பட்ஜெட் கார் Y1K என்ற குறியீட்
பட்ஜெட் கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் மாருதி கார் நிறுவனம் அடுத்து ஒரு புதிய பட்ஜெட் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மாருதியின் புதிய பட்ஜெட் கார் Y1K என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கார் மாருதி ஆல்ட்டோ மற்றும் வேகன் ஆர் கார்களுக்கு இடையிலான விலை ரகத்தில் வர இருக்கிறது.

ஹரியானா மாநிலம், ரோதக் நகரில் உள்ள மாருதி கார் நிறுவனத்தின் கார் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் இந்த புதிய பட்ஜெட் கார் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் 2020ம் ஆண்டு இந்த புதிய காரை மார்க்கெட்டில் களமிறக்க மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறிப்பிட்டு சொல்லப்போனால், புதிதாக வரும் ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு நேர் எதிராக இந்த புதிய காரை நிலைநிறுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு விதிகள் மற்றும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

மேலும், ரெனோ க்விட் காரில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன வசதிகளை இந்த காரில் கொடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மாறும் என்று கருதப்படுகிறது.

இந்த புதிய பட்ஜெட் காரில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, ஆல்ட்டோ 800சிசி காரில் இருக்கும் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆல்ட்டோ கே10, வேகன் ஆர், செலிரியோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் எஞ்சினை இந்த காரிலும் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

முதல்முறையாக கார் வாங்குவோருக்கு மிகச் சிறந்த அம்சங்களுடன் சரியான விலையில் இந்த கார் பொருத்தமாக இருக்கும். எனவே, விற்பனையிலும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி Y1K காரைத் தொடர்ந்து புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் மற்றும் புதிய ஆல்ட்டோ கார்களை அறிமுகம் செய்வதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு கார்களும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Source: Livemint


Click it and Unblock the Notifications








