புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

புத்தாண்டில் புதிய கார் வாங்க முடிவு செய்துள்ளீர்களா? அப்படி என்றால் தற்போதே வாங்கி விடுவதுதான் நல்லது. ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனமானது, என்ட்ரி லெவல் ஆல்டோ 800 முதல் பிரீமியம் கிராஸ் ஓவர் காரான எஸ்-கிராஸ் வரை பல்வேறு வகையான கார்களை விற்பனை செய்து வருகிறது.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

2.53 லட்ச ரூபாய் முதல் 11.45 லட்ச ரூபாய் வரையிலான விலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்து எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

இந்த சூழலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களின் விலை உயரவுள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என மாருதி சுஸுகி நிறுவனம் இன்று (டிச.,5) அறிவித்துள்ளது. ஆனால் விலை உயர்வு எவ்வளவு? என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைக்கு அறிவிக்கவில்லை.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

ஏனெனில் விலையை எவ்வளவு உயர்த்துவது? என்பது தொடர்பாக மாருதி சுஸுகி நிறுவன அதிகாரிகள் தற்போதுதான் ஆலோசித்து கொண்டிருக்கின்றனர். இதன் முடிவில்தான் விலை உயர்வு எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

ஒவ்வொரு கார் மாடலுக்கும் ஒவ்வொரு விதமாக விலையை உயர்த்தலாமா? என்பது குறித்து மாருதி சுஸுகி நிறுவன அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எனவே விலை உயர்வானது, ஒவ்வொரு மாடலை பொறுத்தும் வேறுபடலாம் என கூறப்படுகிறது.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

மாருதி சுஸுகி நிறுவனம் மட்டும் தற்போது விலை உயர்வு குறித்து அறிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக யுடிலிட்டி வெய்கில் மேக்கரான இசுஸு மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களும், தங்களது வாகனங்களின் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

இதன்படி இசுஸு நிறுவன வாகனங்களின் விலை 1 லட்ச ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என இசுஸு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இசுஸு நிறுவனம் நேற்றுதான் (டிச.4) வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

ஆனால் டொயோட்டா நிறுவனமோ, விலை உயர்வு குறித்த அறிவிப்பை கடந்த மாதமே வெளியிட்டு விட்டது. இதன்படி டொயோட்டா நிறுவன வாகனங்களின் விலை சுமார் 4 சதவீதம் வரை உயர்கிறது. இந்த விலை உயர்வு 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

இந்திய ரூபாய் மதிப்பு சரிவே, விலை உயர்விற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் புத்தாண்டில் கார் வாங்க வேண்டும் என்றால், அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும். எனவே புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் தற்போதே வாங்கி கொள்வது நல்லது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 5, 2018, 19:38 [IST]
English summary
Maruti Suzuki, Toyota, Isuzu To Hike Car Prices From 1 January 2019. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+