விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனையை மேலும் அதிகரித்து, ஃபோர்டு மற்றும் டாடா நிறுவனங்களுக்கு செக் வைக்க மாருதி சுஸுகி அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, காம்பேக்ட் எஸ்யூவி வகையை சேர்ந்த காரான விட்டாரா பிரெஸ்ஸாவை, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது முதலே விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

இதனால் கடந்த நிதியாண்டில் மட்டும் 1.48 லட்சம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து தள்ளியது. 2018-19ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களை மட்டும் எடுத்து கொண்டால் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ) 95,000 விட்டார பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு உள்ளது என்பதற்கு இந்த புள்ளி விபரங்கள் ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. தற்போது விட்டார பிரெஸ்ஸா கார்களுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) 4-6 வாரங்களாக உள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

அதாவது விட்டாரா பிரெஸ்ஸா காரை ஒருவர் புக்கிங் செய்தால், அதனை டெலிவரி எடுக்க 4-6 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரை டெலிவரி செய்யும்.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

ஆனால் காத்திருப்பு காலம் மிக அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றன. எனவே காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக, விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை), விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் உற்பத்தியை 94 ஆயிரம் யூனிட்களாக மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. கடந்த 2017-18ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும்.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மிக விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அதன் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

ஒரு சில சமயங்களில் அதிக காத்திருப்பு காலம் இருக்கும் மாருதி சுஸுகி கார்களை தவிர்த்து விட்டு, அதற்கு இணையான வேறு கார்களுக்கு வாடிக்கையாளர்கள் சென்று விடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அதிக காத்திருப்பு காலம் கொண்ட மாருதி சுஸுகி கார்களின் விற்பனை சரிவடைந்து விடுகிறது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

ஆனால் தற்போது விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, காத்திருப்பு காலத்தை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அதன் விற்பனை தற்போது இருப்பதை காட்டிலும் மேலும் உயரும் என மாருதி சுஸுகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அன்று முதல் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 3.57 லட்சம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

அதாவது ஒரு மாதத்திற்கு சராசரியாக 15 ஆயிரம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள வெற்றிகரமான காம்பேக்ட் எஸ்யூவி வகை கார்களில் ஒன்றாக விட்டாரா பிரெஸ்ஸா திகழ்கிறது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

ஆனால் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டும்தான் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை உருவாக்கும் திறன் வாய்ந்தது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் பாதுகாப்பு இருக்காது என்ற பேச்சு நிலவி வருகிறது. அது உண்மையும் கூடதான். ஆனால் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு மட்டும் இது பொருந்தாது. ஏனெனில் விட்டாரா பிரெஸ்ஸா பாதுகாப்பான கார்.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

சமீபத்தில் க்ளோபல் என்சிஏபி நடத்திய க்ராஸ் டெஸ்ட்டில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியது. இதன்மூலம் இந்த பெருமையை பெற்ற 5வது 'மேட் இன் இந்தியா' காராக விட்டாரா பிரெஸ்ஸா உருவெடுத்தது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

இதற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா எட்டியோஸ், டாடா ஜெஸ்ட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 4 'மேட் இன் இந்தியா' கார்கள் இந்த பெருமையை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை மேலும் அதிகரிக்க அதிரடி... ஃபோர்டு, டாடாவுக்கு செக் வைத்த மாருதி சுஸுகி

குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஃபோர்டு எகோ ஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுடன் விட்டாரா பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு கடுமையான போட்டியை வழங்கி வரும் டாடா நெக்ஸான் காரின் புகைப்படங்களை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Maruti Suzuki Vitara Brezza Compact SUV Production Increased To Reduce Waiting Period. Read in Tamil
Story first published: Wednesday, November 21, 2018, 16:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X