மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

மாருதியின் புதிய மினி எஸ்யூவி அடுத்த ஆண்டு தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய மினி எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவ

மாருதி நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி கார் நிறுவனம் Future S என்ற பெயரில் மினி எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதன் அடிப்படையில் விலை குறைவான எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட இருப்பதாக வெளியானத் தகவல்கள் ஆவலை அதிகரித்தன.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இந்த நிலையில், மாருதியின் புதிய மினி எஸ்யூவி அடுத்த ஆண்டு தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய மினி எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இந்த புதிய மினி எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக மிக வலுவான கட்டமைப்புடன் அதிக பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும். தரத்திலும் மிகச் சிறப்பான மாடலாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

தற்போது விற்பனையில் உள்ள விட்டாரா பிரெஸ்ஸாவும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாடல்தான். ஆனால், அதைவிட இந்த புதிய மின எஸ்யூவி நீளம் குறைவாக இருக்கும். மாருதி இக்னிஸ் காரின் வீல் பேஸ் அளவையே இதுவும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

வலிமையான பானட் அமைப்பு, பெரிய வீல் ஆர்ச்சுகள் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவற்றுடன் வசீகரமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மினி எஸ்யூவியில் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொடுக்கப்பட இருக்கிறது.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

இந்த மினி எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட பிரிமியம் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

தற்போது மாருதியின் பல பட்ஜெட் கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும்,1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய மினி எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம்.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

மாருதியின் புதிய மினி எஸ்யூவி ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். மேலும், மாருதி நிறுவனத்தின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் இந்த எஸ்யூவிக்கு அதிக பலம் தரும்.

மாருதியின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி கார் நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா மூலமாக முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மினி எஸ்யூவியும் மாருதி நிறுவனத்திற்கு பெரும் பக்கபலமாக அமையும் என்று நம்பலாம்.

Source: ACI

Most Read Articles
English summary
Maruti To Launch All New Mini SUV In 2019
Story first published: Monday, October 1, 2018, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X