மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த மாடலின் முக்கிய விபரங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் கசிந்துள்ளன. கருப்பு வண்ண பம்பர், கைப்பிடிக

By Saravana Rajan

மாருதி ஆல்ட்டோ காரின் டாக்சி வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த மாடலின் முக்கிய விபரங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் கசிந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

தனி நபர் கார் மார்க்கெட்டில் மாருதி கார் நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது. இந்த நிலையில், தற்போது டிசையர் உள்ளிட்ட கார்களின் டாக்சி வேரியணட்டை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆல்ட்டோ காரின் டாக்சி வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

மாருதி Tour H1 என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. மாருதி ஆல்ட்டோ 800 காரின் பேஸ் மாடலின் அடிப்படையில் இந்த டூர் எச்1 மாடல் வர இருக்கிறது. விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக, கருப்பு வண்ண பம்பர்கள், ரியர் வியூ மிரர்கள் மற்றும் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டீல் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

மாருதி ஆல்ட்டோ டூர் எச்1 கார் வெள்ளை, சில்க்கி சில்வர் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வர இருப்பது இப்போது கசிந்துள்ள புரோசர் விபரத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

பேஸ் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த டாக்சி வேரியண்ட்டில் அடிப்படை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹீட்டருடன் கூடிய ஏசி, பவர் ஸ்டீயரிங், முன் பக்க ஜன்னல்களுக்கான பவர் விண்டோ, எரிபொருள் டேங்க் மூடி மற்றும் பூட் ரூம் மூடியை ரிமோட் மூலமாக திறக்கும் வசதிகள் இருக்கின்றன.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

புதிய மாருதி ஆல்ட்டோ டூர் எச்1 காரில் 796சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23.95 கிமீ மைலேஜ் தரும் என்று மாருதி தெரிவிக்கிறது.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

முதலில் பெட்ரோல் மாடலிலும், பின்னர் சிஎன்ஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎன்ஜி மாடலானது 40 பிஎச்பி பவரையும், 60 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

மாருதி ஆல்ட்டோ டூர் எச்1 மாடலானது, போக்குவரத்து விதிகளின்படி அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற டாக்சி மாடலாக மாருதி களமிறக்குகிறது.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

தற்போது மாருதி நிறுவனம் பல டாக்சி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. டூர் H1 என்பது மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலாகவும், டூர் H2 என்பது மாருதி செலிரியோ காரின் டாக்சி மாடலாகவும், டூர் V என்பது மாருதி ஈக்கோ காரின் டாக்சி மாடலாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி டிசையர் காரின் டாக்சி மாடல் Tour S என்ற பெயரில் விற்பனையில் உள்ளது.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. அந்த புதிய மாடல் வந்த பின்னர், தற்போது விற்பனையில் உள்ள மாருதி எர்டிகா கார் டாக்சி மார்க்கெட்டில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மாருதி ஆல்ட்டோ 800 காரின் டாக்சி மாடலின் விபரம் கசிந்தது!!

நகர்புறத்தில் வாடகை கார்களுக்கான சந்தை மிக வலுவாக இருந்து வருவதை மனதில் வைத்து, வாடகை கார் நிறுவனங்கள் மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களை குறிவைத்து பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது மாருதி நிறுவனம். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source:Indianautosblog

Most Read Articles
English summary
India's leading passenger vehicle maker Maruti Suzuki is offering the taxi variant of the Alto hatchback named as the Tout H1. Now, IAB has got hold of the brochure of the Maruti Tour H1 (Alto 800 Taxi) which reveals the variants and features of the new taxi offering from the Indian manufacturer.
Story first published: Tuesday, July 17, 2018, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X