மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்தது!
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்[ஏஎம்டி] மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.8.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் வி
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்[ஏஎம்டி] மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அண்மையில் விற்பனைக்கு வந்த டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு கடும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் 3 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். VDi AMT, ZDi AMT மற்றும் ZDi+ AMT ஆகிய வேரியண்ட்டுகளில் வசதிகளை பொறுத்து தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டில் வந்திருக்கும் நிலையில், இது மூன்றுவிதமான தேர்வு வாய்ப்புகளை வழங்குகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் தவிர்த்து மேலும் சில கூடுதல் சிறப்புகளை பெற்றிருக்கிறது புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி. தற்போது முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியருக்கு மாறி இருக்கிறது. பளபளப்பான கருப்பு வண்ண அலாய் வீல்களும் புதிது.

ஏற்கனவே விற்பனையில் இருந்த நீல வண்ணத்திற்கு பதிலாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி மாடல் புதிய ஆரஞ்ச் வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவும் டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலின் புதிய ஆரஞ்ச் வண்ணத்திற்கு போட்டியாக இருக்கிறது.

ஏற்கனவே, விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே க்ரோம் க்ரில் கொடுக்கப்பட்டது. இப்போது விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் இப்போது க்ரோம் க்ரில் அமைப்பு நிரந்தர அம்சமாக இருக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இப்போது டியூவல் ஏர்பேக்குகள், இபிடி மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதிவேகம் குறித்து எச்சரிக்கும் வசதியும் எல்லா வேரியண்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தொடர்ந்து 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். இந்த எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இனி ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இனி கிடைக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் ரூ.8.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.10.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் அதிகபட்ச வசதிகளுடன் ஒரே வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. நெக்ஸான் ஏஎம்டி மாடலை பிரெஸ்ஸா ஏஎம்டி டாப் வேரியண்ட் ரூ.10,000 குறைவான விலையில் வந்துள்ளது.
| வேரியண்ட் | விலை |
| விடிஐ ஏஎம்டி | ₹ 8,54,000 |
| இசட்டிஐ ஏஎம்டி | ₹ 9,31,500 |
| இசட்டிஐ ப்ளஸ் ஏஎம்டி | ₹ 10,27,000 |
| இசட்டிஐ ப்ளஸ் டியூவல் டோன் ஏஎம்டி | ₹ 10,49,000 |
*குறிப்பு: அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை (டெல்லி)

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இந்தியாவில் விரைவில் வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டமைப்பை பெற்றிருப்பதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் மத்தியிலான வரவேற்பை தக்க வைக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications







