க்ராஷ் டெஸ்ட்டில் 'டிஸ்டிங்ஷன்' வாங்கி அசத்திய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பாதுகாப்பு தரத்தை சோதிக்கும் விதத்தில், குளோபல் என்சிஏபி அமைப்பு அண்மையில் க்ராஷ் டெஸ்ட் நடத்தி ஆய்வு செய்தது. இதில், அதிகபட்சமான 5க்கு 4 என்ற தரமதிப்பீட்டை பெற்ற
குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் பாதுகாப்பு தரத்தில் சிறந்த மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பாதுகாப்பு தரத்தை சோதிக்கும் விதத்தில், குளோபல் என்சிஏபி அமைப்பு அண்மையில் க்ராஷ் டெஸ்ட் நடத்தி ஆய்வு செய்தது. இதில், அதிகபட்சமான 5க்கு 4 என்ற தரமதிப்பீட்டை பெற்று மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அசத்தி இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான இரண்டு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை குளோபல் என்சிஏபி அமைப்பு அண்மையில்ல க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது.

இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட 17 புள்ளிகளுக்கு 12.51 புள்ளிகளை பெற்று 4 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 49க்கு 17.93 புள்ளிகளை பெற்று இரண்டு நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

டெல்லியில் நடந்த குளோபல் என்சிஏபி அமைப்பின் ஸ்டாப் தி கிராஷ் என்ற வாகன பாதுகாப்பு பிரச்சார கருத்தரங்களில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரம் மிகவும் திருப்தி அளிப்பதாக குளோபல் என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, விபத்தின்போது ஓட்டுனர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில், மாருதி பிரெஸ்ஸா காரின் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதாக குளோபல் என்ஏசிபி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தயாரிப்பு கார்கள் அதிகபட்சமான 5 நட்சத்திர அந்தஸ்தை நெருங்கி வருவதாக குளோபல் என்சிஏபி அமைப்பின் பொதுச் செயலாளர் டேவிட் வார்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அண்மையில் டாடா நெக்ஸான் எஸ்யூவியும் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5க்கு 4 என்ற தரமதிப்பீட்டை பெற்றதே அவர் இவ்வாறு கூறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா காரில் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் சிறிய குறைபாடு இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் குளோபல் என்சிஏபி அமைப்பின் வழிகாட்டு முறைகளுக்கு ஏற்ப இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தை சோதிக்கும் விதத்தில், 18 மாத குழந்தைக்கு ஒப்பான மனித பொம்மையும், மூன்று வயது குழந்தைக்கு ஒப்பான பொம்மையும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதில், மூன்று வயது குழந்தைக்கான பாதுகாப்பு தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால்முன்னோக்கி அமர வைக்கப்பட்டு இருந்த 18 மாதக் குழந்தைக்கு ஒப்பான மனித பொம்மை அதிக பாதிப்புகளை சந்தித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் கட்டுமானத் தரம் மோதல்களை வெகுவாக தாங்கும் விதத்தில் இருப்பதாக குளோபல் என்சிஏபி அமைப்பு திருப்தி தெரிவித்துள்ளது. விரைவில் இந்தியாவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப கார்களை உருவாக்கும் பொறியியல் திறனை மாருதி பெற்றிருப்பதை இந்த சோதனை காட்டுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் க்ராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகள் விற்பனைக்கு பக்க பலமாக அமையும் என்று கருதலாம்.
க்ராஷ் டெஸ்ட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சிறப்பாக அசத்தியிய நிலையில், ரெனோ லாட்ஜி கார் பெரியதாக பல்பு வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications