நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

வரும் நவம்பர் மாதம் புதிய 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் மட்டுமின்றி, 1.5 லிட்டர் டீசல் எஞ்

By Saravana Rajan

வரும் நவம்பர் மாதம் புதிய 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

இந்தியாவில் மாருதி வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு சிறப்பான பட்ஜெட் மாடலாகவும் மாருதி வேகன் ஆர் இருந்து வருகிறது.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

இந்த சூழலில், மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த மாடலை சோலியோ என்ற பெயரில் சுஸுகி கார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

இந்த நிலையில், இந்தியாவில் மாருதி வேகன் ஆர் பிராண்டில் இந்த புதிய 7 சீட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது சுஸுகி கார் நிறுவனம். குஜராத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய சுஸுகி கார் ஆலையில்தான் இந்த 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

புதிய தலைமுறை மாருதி டிசையர் உள்ளிட்ட கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டமைப்பை பெற்றிருக்கும்.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

தற்போது விற்பனையில் உள்ள மாருதி ஈக்கோ மற்றும் எர்டிகா கார்களுக்கு இடையிலான ரகத்தில் இந்த புதிய மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடல் நிலைநிறுத்தப்படும். சாதாரண மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் பல்வேறு மாற்றங்களை பெற்றிருக்கும்.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், க்ரோம் க்ரில் அமைப்பு, ஸ்டீல் வீல், இரட்டை வண்ண இன்டீரியர் மற்றும் பவர் ஸ்டீயரிங் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும். புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும்.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

மாருதி வேகன் ஆர் கார் போன்றே 2,400 மிமீ வீல் பேஸ் பெற்றிருந்தாலும், 4 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் 7 பேர் செல்வதற்கான வசதியை அளிக்கும். மூன்றாவது வரிசையில் சிறுவர்கள் செல்ல ஏதுவாக இருக்கும்.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

இந்த காரில் 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. மாருதி எர்டிகாவிற்காக மாருதி நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நவம்பரில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு வருகிறது - புதிய தகவல்கள்!!

ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டட்சன் கோ ப்ளஸ் காருக்கு நேர் போட்டியாளராக இருக்கும். எனினும், டட்சன் கோ ப்ளஸ் காரைவிட பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source: Rushlane

Article Published On: Friday, May 4, 2018, 16:34 [IST]
English summary
Maruti WagonR 7 seater India Launch Details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+