மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன. புதிய மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகள் எளிதாக ஏறி இறங்குவதற்கு வசதியாக

By Saravana Rajan

மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

இந்திய பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று மாருதி வேகன் ஆர். இந்த நிலையில், மேம்படுத்தப்பட் அம்சங்களுடன் மாருதி வேகன் ஆர் கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாருதி வேகன் ஆர் கார் 5 சீட்டர் மாடலில் மட்டுமின்றி, 7 சீட்டர் மாடலிலும் வர இருக்கிறது.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுஸுகி பிராண்டில் சோலியோ என்ற பெயரில் விற்பனையாகும் கார் மாடல் இந்தியாவில் மாருதி வேகன் ஆர் பிராண்டில் 7 சீட்டர் மாடலிலும் வர இருக்கிறது. இந்த கார் இந்திய சாலைகளில் வைத்து தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

அப்போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. புதிய மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகள் எளிதாக ஏறி இறங்குவதற்கு வசதியாக ஸ்லைடிங் கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

7 சீட்டர் வேகன் ஆர் மாடலில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதியும் இடம்பெற்றிருக்கும்.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

மாருதி ஸ்விஃப்ட், டிசையர் உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 90 பிஎச்பி பவரையும், 118 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

மாருதி ஈக்கோ மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்கு இடையிலான 7 சீட்டர் மாடலாக நிலைநிறுத்தப்படும். டட்சன் கோ ப்ளஸ், ரெனோ ஆர்பிசி உள்ளிட்ட மினி எம்பிவி கார் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

தற்போதுள்ள மாருதி வேகன் ஆர் 5 சீட்டர் மாடலைவிட அதிக உயரம் கொண்ட டால் பாய் டிசைனிலான மாடலாக இருக்கிறது. மாருதி வேகன் ஆர் காரின் டிசைன் சாயல் அதிகம் இருந்தாலும், பிரிமியமாக காட்சி தருகிறது.

மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலின் புதிய ஸ்பை படங்கள்!

வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் காரின் உற்பத்தி துவங்கும் என தகவல்கள் கூறுகின்றன. தீபாவளி பண்டிகையை கணக்கில் வைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. பட்ஜெட் விலையிலான மாருதியின் 7 சீட்டர் மாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Source: Rushlane

Article Published On: Friday, June 29, 2018, 18:04 [IST]
English summary
Maruti Suzuki has already confirmed the launch of the new WagonR seven-seater in the Indian market. Now, RushLane has got hold of the latest images of the Maruti WagonR seven-seater. The new spy images reveal the front fascia and the interior of the WagonR seven-seater.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+