விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

புதிய மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஜப்பானில் ஏற்கனவே புதிய வேகன் ஆர் காரை சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துவி

By Saravana Rajan

புதிய மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

நகர்ப்புற இந்திய மக்களின் விருப்ப தேர்வுகளில் முக்கிய இடத்தை மாருதி வேகன் ஆர் வகிக்கிறது. விற்பனையிலும் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த சூழலில், சந்தையில் பல புதிய மாடல்களின் வருகையால் மாருதி வேகன் ஆர் காருக்கு நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக, புதிய வேகன் ஆர் காரை மாருதி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

தற்போது இந்தியா வர இருக்கும் மாடல் 6வது தலைமுறை வேகன் ஆர் கார். 3வது மற்றும் 5வது தலைமுறை வேகன் ஆர் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. ஜப்பானில் ஏற்கனவே இந்த 6வது தலைமுறை புதிய வேகன் ஆர் காரை சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

இந்த மாடலை வரும் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய 'டால் பாய்' டிசைன் தாத்பரியத்தில் கூடுதல் வசீகரத்துடன் புதிய மாருதி வேகன் ஆர் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் மாருதி வேகன் ஆர் காரில் 660சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது கெய் என்ற மினி கார் ரகத்தில் அங்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வரும்போது, 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

தற்போதைய மாடல் பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் கிடைக்கிறது. எனவே, புதிய மாடலும் எரிவாயுவில் இயங்கும் ஆப்ஷனிலும் வரும் என்று எதிர்பார்க்கலாம். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படும்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். தவிர்த்து, டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிரந்தரமாக வழங்கப்படும்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்!!

இந்தியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப தரமான கட்டுமானத்துடன் புதிய மாருதி வேகன் ஆர் கார் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பேட்டரியில் இயங்கும் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 8, 2018, 11:20 [IST]
English summary
Maruti Suzuki is set to launch the next-generation WagonR in India. According to sources from NDTV Auto, the new Maruti Suzuki WagonR will be introduced in India, sometime in the early parts of 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+