மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி வேகன் ஆர் காருக்கான இந்த விசேஷ ஆக்சஸெரீகள் இரண்டு விதமான பாடி கிட்டுகளா
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றுள்ள கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காலாணம்.

மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடலில் விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டு தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரியர் ஸ்பாய்லர், ரூஃப் ரெயில்களும் உள்ளன. சாதாரண மாடலில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது.

வெளிப்புறத்தைவிட உட்புறத்தில் அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது இந்த விசேஷ மாடல். உட்புறத்தில் கவர்ச்சிகரமான சீட் கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கதவுகளின் உட்புறத்திலும், சென்ட்ரல் கன்சோலிலும், மர தகடு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலையணைகளும் கொடுக்கப்படுகின்றன.

மாருதி வேகன் ஆர் காருக்கான இந்த விசேஷ ஆக்சஸெரீகள் இரண்டு விதமான பாடி கிட்டுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தபட்ச ஆக்சஸெரீகள் கொண்ட கிட் ரூ.15,490 விலையிலும், அதிகபட்ச ஆக்சஸெரீகள் கொண்ட கிட் ரூ.25,490 விலையிலும் கிடைக்கிறது.

மாருதி வேகன் ஆர் காரில் இருக்கும் 998சிசி எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்தியாவின் அதிகம் விரும்ப்படும் பட்ஜெட் கார் மாடலான மாருதி வேகன் ஆர் காருக்கான இந்த விசேஷ பாடி கிட்டுகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

இதனிடயே, முற்றிலும் புதிய மாருதி வேகன் ஆர் கார் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய மாருதி வேகன் ஆர் காரில் ஏராளமான பிரிமியம் அம்சங்கள் இடம்பெற இருப்பதுடன், வடிவமைப்பிலும் புதிதாக வர இருக்கிறது.

எனவே, இந்த பண்டிகை காலத்தில் முடிந்தவரை அதிகபட்ச விற்பனையை பதிவு செய்யும் நோக்கில், இந்த விசேஷ ஆக்சஸெரீகளை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இந்த பாடி கிட்டுகள் காரின் மதிப்பை கூட்டும் விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








