புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

மேம்படுத்தப்பட்ட புதிய மஸராட்டி கிப்லி சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

2018 மாடலாக வந்திருக்கும் புதிய மஸராட்டி கிப்லி கார் டீசல், க்ரான்ஸ்போர்ட் மற்றும் க்ரான்லூஸோ ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி கிப்லி காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

விஎம் மோட்டோரி நிறுவனத்துடன் இணைந்து இந்த எஞ்சினை விசேஷமான தொழில்நுட்ப அம்சங்களுடன் மஸராட்டி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி கிப்லி கார் 0- 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி கிப்லி கார் யூரோ-6 மாசு உமிழ்வு தர எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த காரில் ஆட்டோ ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பமும், குறைவான மாசு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் ஆட்புளூ என்ற தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி கிப்லி காரின் க்ரான்லூஸோ மாடலின் வெளிப்புறத் தோற்றம் கூடுதல் மெருகேற்றப்பட்டு வந்துள்ளது. இந்த காரில் 12 விதமான முறையில் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் மெமரி திறன் மற்றும் முழுவதுமான பிரிமியம் லெதர் அல்லது எர்மெனிகில்டோ ஸெக்னா சில்க் எடிசன் என்ற விசேஷ அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்போர்ட் பெடல்கள், அதிக பிடிப்புடன் கூடிய விசேஷ ஸ்டீயரிங் வீல் அமைப்பு, பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாக மேனுவலாக காரை ஓட்டுவதற்கான வாய்ப்பும் இந்த காரில் இருக்கிறது.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் டீசல், க்ரான்ஸ்போர்ட் மற்றும் க்ரான்லூஸோ மாடல்களுக்கு இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்காக முன்புறம் மற்றும் பின்புற பம்பர்களில் வடிவமைப்பு வித்தியாசங்கள் இருக்கின்றன.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எதிரொலிப்பு இல்லாத மேட்ரிக்ஸ் ஹை- பீம் ஹெட்லைட், வாய்ஸ் கன்ட்ரோல், ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி கிப்லி காரின் டீசல் மாடல் ரூ.1.33 கோடி விலையிலும், க்ரான்ஸ்போர்ட் மாடல் ரூ.1.38 கோடி விலையிலும், க்ரான்லூஸோ மாடல் ரூ.1.42 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே கார்களின் டீசல் மாடல்களுடன் இந்த மஸராட்டி கிப்லி கார் நேரடியாக போட்டி போடுகிறது.

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati Ghibli 2018 version launched in India. The 2018 version of the Maserati Ghibli comes in three trims: Diesel, GranSport and GranLusso. The models are priced at Rs 1.33, Rs 1.38 and 1.42 crore, respectively. All prices are ex-showroom (Delhi).
Story first published: Saturday, March 17, 2018, 9:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more