மெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் 2 புதிய லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்!!
மெர்சிடிஸ் - ஏஎம்ஜி 43 4 மேட்டிக் கூபே மற்றும் எஸ்எல்சி 43 கார்களின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஜிஎல்இ 43 4 மேட்டிக் கூபே ஆரஞ்ச் ஆர்ட் மாடலுக்கு ரூ.1.02 கோடி எக்ஸ்ஷோரூம்
மெர்சிடிஸ் - ஏஎம்ஜி 43 4 மேட்டிக் கூபே மற்றும் எஸ்எல்சி 43 கார்களின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு புதிய சிறப்பு பதிப்பு மாடல்களில் இடம்பெற்றிக்கும் சிறப்பம்சங்கள் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 43 4 மேட்டிக் கூபே காரின் லிமிடேட் எடிசன் மாடலானது ஆரஞ்ச் ஆர்ட் என்ற பெயரில் வந்துள்ளது. அதேபோன்று, எஸ்எல்சி 43 மாடலின் லிமிடேட் எடிசன் மாடல் ரெட் ஆர்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஜிஎல்இ 43 4 மேட்டிக் கூபே ஆரஞ்ச் ஆர்ட் மாடலுக்கு ரூ.1.02 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், எஸ்எல்சி 43 ரெட் ஆர்ட் மாடலுக்கு ரூ.87.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இரண்டு மாடல்களுக்கும் சேர்த்து 25 கார்கள் மட்டுமே இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ்- ஏஎம்ஜி ஜிஎல்இ 43 4 மேட்டிக் கூபே ஆர்ஞ்ச் ஆர்ட் மாடலில் 21 அங்குல கருப்பு அலாய் வீல்கள் மற்றும் பம்பரிலும், சக்கரங்களிலும் ஆரஞ்ச் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் கருப்பு வண்ண எல்இடி வளையம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உட்புறத்தில் ஆரஞ்ச் வண்ண உதிரிபாகங்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ண உயர்தர நப்பா லெதர் இருக்கை இடம்பெற்றுள்ளது. இருக்கைகளில் ஆரஞ்ச் வண்ணத் தையல்களும் சிறப்பு. கதவுகள் மற்றும் மிதியடிகளில் ஏஎம்ஜி பிராண்டு பெயர் பொறிக்கப்பட்டு இருக்கின்றன.

மறுபுறத்தில் எஸ்எல்சி 43 ரெட் ஆர்ட் எடிசனில் 18 அங்குல அலாய் வீல்கள் கொாடுக்கப்பட்டுள்ளன. காரின் பம்பர், பிரேக் காலிபர்கள் மற்றும் உட்புறத்தில் சிவப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது அதிக வசீகரத்தை பெற்றிருக்கிறது.

இரண்டு கார்களிலுமே 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் 361 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறதுத. ஜிஎல்இ கூபே மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும், எஸ்எல்சி 43 மாடலில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆரஞ்ச் மற்றும் சிவப்பு வண்ண அலங்காரம் மூலமாக சாதாரண மாடலிலிருந்து இந்த இரண்டு லிமிடேட் எடிசன் மாடல்களும் அதிக தனித்துவத்தை பெற்றிருக்கின்றன. இந்த மாடல்கள் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








