புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் சொகுசு காரின் அதிசெயல்திறன் மிக்க ஏஎம்ஜி எஸ்63 கூபே மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

By Saravana Rajan

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் சொகுசு காரின் அதிசெயல்திறன் மிக்க ஏஎம்ஜி எஸ்63 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டெல்லியில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் முழுமையான விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிக உயரிய வகை சொகுசு செடான் கார் மாடல் எஸ் க்ளாஸ். W222 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் எஸ் க்ளாஸ் காரின் அதிசெயல்திறன் மிக்க பெர்ஃபார்மென்ஸ் மாடலான ஏஎம்ஜி எஸ்63 கார் 3 டோர் மாடலாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் இந்த அதிசக்திவாய்ந்த எஸ் க்ளாஸ் கார் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.2.55 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஏஎம்ஜி மாடல் கிடைக்கும். சொகுசு செடான் கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்குரிய மிரட்டலான டிசைன் தாத்பரியங்களையும் கலந்து கட்டிய மாடலாக இந்த காரை உருவாக்கி இருக்கின்றனர்.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பிற ஏஎம்டி மாடல்களை போன்றே தனித்துவமான முன்புற வடிவமைப்பை இந்த அதிசெயல்திறன் மிக்க எஸ் க்ளாஸ் ஏஎம்ஜி கார் பெற்றிருக்கிறது. செங்குத்தான க்ரோம் சட்டங்களுடன் கூடிய க்ரில் அமைப்பு, அகலமான ஏர் டேம் அமைப்பு, கார்பன் மற்றும் கருப்பு வண்ண பாகங்களுடன் மிரட்டலாக இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த கார் 3 டோர் மாடலாக வந்துள்ளதால், பக்கவாட்டில் மிக நீளமான காராக தோற்றமளிக்கிறது. வலிமையான பாடி லைன்களும் இந்த காரின் மிடுக்குக்கும், மிரட்டலுக்கும் துணை நிற்கிறது. அத்துடன் ஏஎம்ஜி கார்களின் விசேஷமான டிசைனிலான 20 அங்குல அலாய் சக்கரங்களும் எடுப்பாக தெரிகின்றன.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

முன்புறத்திலும், பக்கவாட்டிலும் மிகச் சிறப்பாகவும், முரட்டுத்தனமான கூபே மாடலாக தோற்றமளிக்கும் இந்த காரின் பின்புற டிசைன் சிலருக்கு ஏமாற்றம் அளிக்கும். எனினும், எல்இடி டெயில் லைட்டுகள், நான்கு குழல்கள் கொண்ட சைலென்சர் அமைப்புகள் வசீகரிக்கும் அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. உயர்தர நப்பா லெதர் இருக்கைகள் பல்வேறு வண்ணங்களில் தேர்வு செய்யும் வசதியுடன் கிடைக்கிறது. 64 வண்ணங்களில் ஒளிரும் தன்மை கொண்ட ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளது.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பர்ம்ஸ்டெர் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மசாஜ் வசதி மற்றும் வெப்பப்படுத்தும் வசதியுடன் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இது கூபே மாடலாக இருப்பதால், பின்புற இருக்கைகளில் மிக நெரிசலான அமைப்பை பெற்றிருக்ககிறது. பின் இருக்கைகளில் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் மிக குறைவாக இருப்பதால், உயரமானவர்கள் அமர்வதற்கு கடும் சிரம் இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் இரண்டு டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 610 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஸ்பீடுஷிஃப்ட் மல்டி- க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. 4 மேட்டிக்+ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் தொட்டுவிடும். இந்த பிரம்மாண்ட கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் செமி- ஆட்டோனாமஸ் டிரைவிங் மோடு வசதி முக்கிய அம்சமாக இருக்கிறது. ஓட்டுனர் கண்களுக்கு புலப்படாத இடத்தில் வரும் வாகனங்கள், பொருட்களை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. 10 ஏர்பேக்குகள் மற்றும் காரை சுற்றிலும் கண்காணிக்கும் 360 டிகிரி கேமரா ஆகியவையும் முக்கிய அம்சங்கள்.

புதிய மெர்சிடிஸ் - ஏஎம்ஜி எஸ்63 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

சொகுசு மற்றும் பெர்ஃபார்மென்ஸ் என இரண்டையும் சரிவிகிதத்தில் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த கார் நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தையும், அவர்களது ரசனைக்கு தீணி போடும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 18, 2018, 14:44 [IST]
English summary
Mercedes-AMG S63 Coupe India-Launch Details: Mercedes-Benz has launched the new AMG S63 Coupe (C217) in India. The 3-door version of the current W222 S-Class is priced at Rs 2.55 crore ex-showroom (Delhi). Mercedes-Benz had only recently launched the insane performance sedan – the AMG E63 S, at Rs 1.50 crore ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+