புதிய 2019 ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக் காரை வெளியிட்ட மெர்சிடிஸ் பென்ஸ்..!!

Written By:

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது புதிய ஏ- கிளாஸ் ஹேட்ச்பேக் காரை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த கார் படிப்படியாக மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

2020ம் ஆண்டிற்குள் பல்வேறு புதிய மாடல் கார்களை வெளியிட மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அதில் முதல் காராக வெளிவந்துள்ளது 2019 மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் (டபுள்யூ 177).

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

மெர்சிடிஸின் பென்ஸ் சமீபத்தில் கொண்டு வந்த 'சென்ஷுவல் ப்யூரிட்டி' என்ற வடிவமைப்பு தத்துவத்தை சார்ந்து இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

எம்.எஃப்.ஏ பிளாட்ஃபார்மின் கீழ் தயாராகியுள்ள 2019 ஏ- கிளாஸ் கார், சிறந்த ஸ்திரத்தன்மை மற்றும் காற்றியக்கவியலை வழங்குகிறது.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

கூடுதலாக இந்த காரின் வடிவமைப்பு மெர்சிடிஸ் வெளியிட்ட சிஎல்எஸ்- கிளாஸ் காரை நினைவிற்கு கொண்டு வருகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய ஏ- கிளாஸ் காரை ஏ 200, ஏ 250 மற்றும் ஏ 190டி ஆகிய மூன்று வேரியன்டுகளில் வெளியிடுகிறது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

எஞ்சின் தரத்திற்கு ஏற்றவாறு இவை முறையே 163 பிஎச்பி, 224 பிஎச்பி மற்றும் 116 பிஎச்பி ஆற்றலை வழங்கும். புதிய ஏ-கிளாஸ் காரின் எல்லா வேரியன்டுகளும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனோடு இணைக்கப்பட்டு இருக்கும்.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

புதிய மெர்சிடிஸ் ஏ- கிளாஸ் காரில் ஆப்டிக்கல் 4 மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. வீல்பேஸ் தரத்தோடு ஒப்பிடும் போது இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் வெர்ஷனை விட அதிக பயன் கொண்டது.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

2019 மெர்சிடிஸ் ஏ கிலாஸ் காரின் உள்புர கட்டமைப்பு ஏதோ விமானத்தை ஓட்டுவது போன்ற உணர்வை எழுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டர்பைன் ஏர் வென்ட்ஸ் மற்றும் ஸ்பிளிட் டாஷ்போர்டு போன்றவை ஏ-கிளாஸ் காரின் உட்புற கட்டமைப்பை ஆடம்பர காக்பிட் போல உணரச்செய்கிறது.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

மேலும் கேபின் வசதியில் இடம்பெற்றுள்ள சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு ஒளிரும் விளக்குகள் 64 வித நிற தேர்வுகளுடன் நமது எண்ண அலைகளுக்கு தகுந்தாற்போல இயங்கும்.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

ஓட்டுநருக்கான தேவைகளில் காரின் வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு 7 இஞ்ச் அல்லது 10.25 இஞ்ச் திரை ஏ-கிளாஸ் டாஷ்போர்டில் இருக்கும். இது காரின் அனைத்து செயல்பாடுகளையும் காட்டும்.

2019 மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் காரில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட கட்டளை தான் இந்த மாடலின் முக்கிய ஹைலைட்.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

மெர்சிடிஸ் பென்ஸ் பயனர் அனுபவத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள MBUX தொழில்நுட்பத்தின் கீழ் ஏ-கிளாஸ் காரின் அனைத்து செயல்பாடுகளையும் வாய்மொழி மூலம் கட்டுப்படுத்தலாம்.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

ஆடம்பர கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருப்பது மெர்சிடிஸின் தயாரிப்புகள் தான். அதில் ஏ கிளாஸ் பல தரப்பு மக்களுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.

2019 மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!!

தற்போதைய ஆடம்பர கார் சந்தைக்கு ஏற்றவாறு சமீபத்திய தொழில்நுட்பங்கள் , அதிக சொகுசு வசதிகளுடன் ஏ கிளாஸ் காரை மெர்சிடிஸ் தயாரித்துள்ளது.

English summary
Read in Tamil: 2019 Mercedes-Benz A-Class Specs, Features, Images & More. Click for Details...
Story first published: Tuesday, February 6, 2018, 15:49 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark