இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இந்தியாவில் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்தான். இந்நிறுவனம் ஏ கிளாஸ் ஹேட்ச் பேக் காரில் இருந்து சொகுசு காரான மெர்சிடிஸ் மேபேஜ் எஸ்650 கார், சொகுசு எஸ

இந்தியாவில் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்தான். இந்நிறுவனம் ஏ கிளாஸ் ஹேட்ச் பேக் காரில் இருந்து சொகுசு காரான மெர்சிடிஸ் மேபேஜ் எஸ்650 கார், சொகுசு எஸ்யூவி காரான சமீபத்தில் வெளியான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 மற்றும் சூப்பர் காரான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடிஆர் என பல்வேறு கார்களை தயாரித்து வருகிறது.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

மேலும் இந்நிறுவனம் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார்களையும் தயாரித்து வருகிறது. அந்த கார்கள் எல்லாம் இக்யூ என்ற என்ற பெயரில் வெளியாகிறது. மேலும் இந்த கார்கள் எல்லாம் இனி சர்வதேச அளவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் வெளியிடப்படும் என டெல்லியில் நடந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 காரின் அறிமுகத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூ சில எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை முதலில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இது குறித்து அந்நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு அதிகாரி மைக்கேல் ஜோப் கூறுகையில், "நாங்கள் எப்பொழுதும் எங்கள் நிறுவன தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறோம். எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தரவை ஏற்கனவே இக்யூசி என்ற காரை நாங்கள் வாங்கியது தொடர்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

அந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு அரசு தரப்பில் அதிக ஆதரவு உள்ளது. ஆனால் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட கார்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய சுமார் 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இருந்தாலும் காரை விற்க ஜிஎஸ்டி குறைவாக இருக்கிறது. இதனால் சற்று நியாயமான விலையில் விற்க முடியும்.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இருந்தாலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை குறைவாகவே உள்ளது" என கூறினார்.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு கொண்டு வருவது பென்ஸ் நிறுவனத்திற்கு பெரும் வளர்ச்சியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் போதுமான அளவிற்கு காருக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் இல்லை.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இதனால் பென்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் சில பொது இடங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட வேண்டும். அதிலும் குறிப்பாக பென்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இந்தியாவில் சமீபகாலமாக எஸ்யூவி கார்களுக்குதான் நல்ல மார்கெட் இருக்கிறது. அதனால் இந்த முடிவு நிச்சயம் வரவேற்க்க வேண்டிய முடிவாகவும், வெற்றி பெறக்கூடிய முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இது மட்டும் இல்லாமல் தற்போது மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரு நிறுவனம் 2,500 கார்களை வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டு நிறுவனங்களின் துணையில்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் காரை கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இதனால் இந்த கார்களை அவ்வாறு இறக்குமதி செய்து முன்னோட்டம் பார்த்து விட்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் விற்பனையை பெருக்க இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேரலாம் என முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Mercedes Benz planned to bring electiric suv in india. Read in Tamil
Story first published: Monday, October 8, 2018, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X