இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்... மெர்சிடிஸ் பென்ஸ் ஹேட்ரிக் வெற்றி..!!
இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்... மெர்சிடிஸ் பென்ஸ் ஹேட்ரிக் வெற்றி..!!
Recommended Video

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில், ஆடம்பர கார் மாடல்களுக்கான விற்பனை திறன் மிகவும் குறைவு தான். ஆனால் அது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவின் சொகுசு கார்கள் விற்பனை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. அதில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தை நீடிக்கிறது.

சென்ற ஆண்டில் சுமார் 15,330 கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். இதை 2016 ஆண்டுடன் ஒப்பிடும் போது 16 சதவீத விற்பனை வளர்ச்சியை 2017ல் பதிவு செய்திருக்கிறது மெர்சிடிஸ்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்தியாவில் அமலுக்கு வந்த பிறகு வாகன துறை வணிகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் 2017 ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மெர்சிடிஸ் 8159 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

மெர்சிடிஸ் இந்த ஹேட்ரிக் வெற்றியை பதிவு செய்வதற்கு செடான் மாடல்களான சி- கிளாஸ், இ- கிளாஸ், எஸ்-கிளாஸ் ஆகிய கார்கள் காரணமாக அமைந்துள்ளன.
Trending On Drivespark Tamil:

குறிப்பாக இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை பட்டியலில் மெர்சிடிஸின் செடான் மாடல் கார்கள் இடம்பிடிப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மெர்சிடிஸின் எஸ்யூவி தயாரிப்புகளான ஜிஎல்சி, சிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் போன்ற கார்களும் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை குவித்திருக்கின்றன.

மெர்சிடிஸ் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது பெரிய காரியமல்ல. ஆனால் உலக வாகன விற்பனை அரங்கத்திலும் தனது நிலையை மெர்சிடிஸ் பென்ஸ் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்தியாவில் 15,330 சொகுசு கார்களை விற்பனை செய்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ், உலகளவில் 22,89,344 கார் மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலகளவில் கார் விற்பனையில் மெர்சிடிஸின் விற்பனை திறன் 2016ம் ஆண்டை விட 2017ம் ஆண்டில் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸை தொடர்ந்து இந்தியாவின் சொகுசு கார் விற்பனை சந்தையில் இரண்டாவது இடத்தை பிஎம்டபுள்யூ நிறுவனம் பெற்றுள்ளது.
இதை அனைவரும் எதிர்பார்த்த நிலை தான்.

ஆனால் ஆடி காருக்கான விற்பனை திறன் இந்தியாவில் குறைந்துக்கொண்டே போகிறது. 2014 வரை சொகுசு கார் விற்பனையில் இந்தியாவில் ஆடி முதலிடத்தில் இருந்தது.

கடந்த 2017ம் ஆண்டில் 7876 கார்களை மட்டுமே இந்தியாவில் ஆடி விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனம் சொகுசு கார் விற்பனை பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸில் ஹேட்ரிக் சாதனை பற்றி பேசிய மெர்சிடிஸ் இந்தியாவின் நிர்வாக அதிகாரி ரோலன்டு ஃபால்கர், இது ஒரு இன்பதிரிச்சியான வெற்றி என்றார்.

இந்திய வாடிக்கையாளர்களிடம் இ- கிளாஸ் டபுள்யூபி மாடல் கார், நற்பெயரை பெற்றுள்ளதாக கூறிய ஃபால்கர், 2017ம் ஆண்டு பல்வேறு ஏமாற்றங்கள் மற்றும் ஆச்சர்யங்களை அளித்த வருடம் என்று அவர் கூறுகிறார்.

அதாவது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு அது மகிழ்ச்சியைத்தான் அளித்துள்ளது. ஆனால் செஸ் வரியை ஏற்றி மத்திய அரசு அறிவித்த போது மெர்சிடிஸ் பெரிய கவலையில் ஆழ்ந்துள்ளது.
Trending On Drivespark Tamil:

இருந்தபோதிலும், மெர்சிடிஸ் கார்களை வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை.
மேலாக எந்த வருடம் இல்லாமல், 2017 ம் ஆண்டில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சொகுசு கார்கள் விற்பனை செய்து மெர்சிடிஸ் சாதனை படைத்துள்ளது.

சொகுசு கார் விற்பனையில் புதிய இலக்கை எட்டியுள்ள மெர்சிடிஸ், 2018ம் ஆண்டில் பல்வேறு புதிய ரக கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

குறிப்பாக மெர்சிடிஸின் பெர்ஃபாமன்ஸ் பிரிவான ஏஎம்ஜி-ல் இருந்து பல புதிய கார்கள் இந்தாண்டில் வெளிவரும் என்று நிர்வாக அதிகாரி ரோலன்ட் ஃபால்கர் இன்பதிர்ச்சியை அளித்தார்.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications