ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி- கிளாஸ் சொகுசு மினி வேன் வரும் ஜனவரியில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜனவரி 24ந் தேதி இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்க

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி- கிளாஸ் சொகுசு மினி வேன் வரும் ஜனவரியில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் வாகனம் சொகுசு ரக எம்பிவி வாகன சந்தையில் பிரபலமாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நம்பர்-1 இடத்தை தக்க வைப்பதற்காக, படு முஸ்தீபுடன் வேலை பார்த்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தாண்டு பரிசாக தனது வி கிளாஸ் மினி வேனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

வரும் ஜனவரி 24ந் தேதி இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை விட்டால் அதனை தாண்டிய சொகுசு ரகத்தில் சிறந்த எம்பிவி ரக காரை வாங்க விரும்புவோருக்கு இது சரியான சாய்ஸாக இருக்கும்.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன் பல மாடல்களில் விற்பனை செய்யப்பட்டாலும், சாதாரண ரக மாடல் 5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதிலேயே, கூடுதல் நீளம் கொண்ட மாடலும் உண்டு.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

ஒரு உண்மையான எம்பிவி ரக காரின் பயண அனுபவத்தை விரும்புவோருக்கு இந்த கார் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில், உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை இந்த மினி வேன் அளிக்கும்.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

அத்துடன், உயர்தர பாகங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகளை அளிக்கும். இருக்கைகள் மிக சொகுசாக இருக்கும். இந்தியாவில் 6 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்க்ிரது.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

இந்த காரில் 360 டிகிரி கேமரா, தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, அட்டென்ஷன் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் குறித்த எச்சரிக்கை என பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 191 பிஎச்பி பவரையும்,, 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு ரக மினி வேன் முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்ப்டும். வாடிக்கையாளர்களிடம் அதிக ஆதரவு இருந்தால், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜனவரியில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் சொகுசு மினி வேன்!

ரூ.70 லட்சம் முதல் ரூ.75 லட்சத்திற்கு இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது. தற்போதைக்கு இதற்கு நேர் எதிர் போட்டியாளராக எதுவும் இல்லை. டொயோட்டா நிறுவனமும் தனது அல்ஃபார்டு சொகுசு ரக எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அதனைவிட இந்த வி கிளாஸ் சொகுசு மினி வேன் விலை அதிகமான ரகத்தில் வர இருக்கிறது.

Article Published On: Tuesday, December 25, 2018, 14:08 [IST]
English summary
Mercedes-Benz V-Class, the luxury van from the iconic German brand, will launch in India on 24 January 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+