செகண்ட் ஹேண்ட் ஆடி, ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ கார்களை விற்பனை செய்கிறது மஹிந்திரா
செகண்ட் ஹேண்ட் லக்ஸரி கார்களை விற்பனை செய்வதற்காக பிரத்யேகமான எடிசன் ஸ்டோரை MFCW திறந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
செகண்ட் ஹேண்ட் லக்ஸரி கார்களை விற்பனை செய்வதற்காக பிரத்யேகமான எடிசன் ஸ்டோரை MFCW திறந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதன்மையான யூஸ்டு கார் விற்பனை நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் (Mahindra First Choice Wheels-MFCW). தற்போது லக்ஸரி யூஸ்டு கார்களை விற்பனை செய்வதற்காக பிரத்யேகமான 'எடிசன் ஸ்டோர்' (Edition store) ஒன்றை MFCW திறந்துள்ளது.

இங்கு ஆடி, ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் வால்வோ போன்ற பிரீமியம் நிறுவனங்களின் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை செய்யப்படும். இதன்படி முதல் எடிசன் ஸ்டோர் மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது சாதாரண கார் வைத்திருப்பவர்கள் எல்லாம், அதற்கு பதிலாக பிரீமியம் கார் வாங்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் பிரீமியம் கார்களின் விலை மிக அதிகம். எனவே செகண்ட் ஹேண்டிலாவது ஒரு பிரீமியம் காரை வாங்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது.

அத்தகைய நபர்களுக்கு எடிசன் ஸ்டோர் பயன் உள்ளதாக இருக்கும். எடிசன் ஸ்டோர்களில் மிகவும் மலிவான விலையில், செகண்ட் ஹேண்ட் லக்ஸரி கார்கள் விற்பனை செய்யப்படும். தற்போது முதல் எடிசன் ஸ்டோர் மும்பையின் ஜூகு பகுதியில் செயல்பட தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வெகு விரைவில் இன்னும் 5-6 எடிசன் ஸ்டோர்களை திறக்க MFCW முடிவு செய்துள்ளது. இந்த அவுட்லெட்கள் ஒவ்வொன்றிலும் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 10-12 கார்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் MFCW நிறுவனத்திற்கு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 1,200 அவுட்லெட்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விற்பனை செய்யப்படும் கார்கள், பல்வேறு கட்ட தர ஆய்வுகளுக்கு பின்பே, வாடிக்கையாளர்களின் கைகளை சென்றடைகிறது.

இதன் காரணமாக MFCW நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு 1.60 லட்சம் கார்களை MFCW விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2017ம் ஆண்டில் 2.40 லட்சம் கார்களாக அதிகரித்தது.

MFCW நிறுவனத்திற்கு தற்போது இந்தியாவில் 1,200 அவுட்லெட்கள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் 5,000ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை MFCW மிக தீவிரமாக எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் லான்ச் செய்த மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications