எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

2020ம் ஆண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க உள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எம்ஜி மோட்டார் தயாரிப்புகள் இந்

2020ம் ஆண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க உள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிரடி திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவின் ஷாங்காய் நகரில் இந்திய பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சியை எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான SAIC குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் களமிறங்க இருப்பதாக செயிக் குழுமத்தின் சர்வதேச வர்த்தக பிரிவு அதிகாரி மைக்கேல் யாங் தெரிவித்தார்.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

மேலும், இரண்டாவது மாடலாக இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார். இது முற்றிலும் பேட்டரியில் இயங்கும் மின்சார எஸ்யூவி மாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

சீனாவில் செயிக் குழுமம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் முக்கிய நிறுவனமாக விளங்குகிறது. எனவே, எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கான தொழில்நுட்பங்களை அந்நிறுவனம் கைவசம் வைத்திருக்கிறது. எனவே, எளிதாக எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பை கொண்டுள்ளது எம்ஜி மோட்டார்.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

இதுதொடர்பாக, அந்த நிகழ்ச்சியில் பேசிய எம்ஜி மோட்டார் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா," இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான திட்டங்களிலும், பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

அடுத்த மாதம் முதல் எங்களது தயாரிப்புகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளை முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதைத்தொடர்ந்து, எங்களது தயாரிப்புகளை மக்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட இருக்கிறோம்.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

எங்களது தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கப் பணிகள் சீனாவிலும், இங்கிலாந்திலும் நடக்கின்றன. பின்னர், குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள எமது ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். மேலும், ஆலை வளாகத்திலேயே உதிரிபாக சப்ளையர்களின் ஆலைகளும் அமைய இருக்கிறது. எமது தயாரிப்புகளில் உள்நாட்டு உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட உள்ளது.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எம்ஜி மோட்டார் தயாரிப்புகள் இந்திய சாலை நிலைகளுக்கு தக்கவாறும், உலகத் தரத்திற்கு இணையானதாகவும் இருக்கும்," என்று ராஜீவ் கூறி இருக்கிறார்.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

தற்போது ஹலோல் ஆலையில் ஆண்டுக்கு 80,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருக்கிறது. தேவையை பொறுத்து, இதனை ஆண்டுக்கு 2,00,000 கார்கள் என்ற அளவில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், விரிவாக்கவும் செய்யவும் எம்ஜி மோட்டார் வசம் திட்டம் உள்ளது.

எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை கலக்கப் போகும் எம்ஜி மோட்டார்!

அடுத்த ஆண்டு முதல் கார் மாடலை களமிறக்கும்போது 45 டீலர்கள் மற்றும் 100 சேவை மையங்களுடன் இந்திய சந்தையில் கால் பதிக்க உள்ளது எம்ஜி மோட்டார். முதல்கட்டமாக 300 பணியாளர்களுடன் இதிய வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,500 பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 20, 2018, 12:07 [IST]
English summary
MG Motor has announced that the company will introduce an electric SUV in the Indian market by 2020. The electric SUV will be the second launch from MG Motor while the first product for the Indian market will be a C-segment SUV. MG Motor India will launch its first SUV in the second quarter of 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+