எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்!

இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டில் முதலாவது மாடலாக சி-செக்மென்ட் ரகத்தில் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக செயிக் குழுமம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்த சேர்ந்த பழம் பெருமை வாய்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது சீனாவை சேர்ந்த SAIC குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கும் தனது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனை கொள்கைகள் குறித்த விபரங்களை செயிக் குழுமம் வெளியிட்டுள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

பத்திரிக்கையாளர் நிகழ்ச்சி

சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் இந்திய பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சிக்கு செயிக் மோட்டார்ஸ் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா உள்ளிட்ட இந்திய ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த நிகழ்ச்சியில், செயிக் குழுமம் எம்ஜி மோட்டார்ஸ் வர்த்தக திட்டம் குறித்து முக்கியத் தகவல்களை இந்திய பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

முதல் கார் மாடல்

அதில், இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டில் முதலாவது மாடலாக சி-செக்மென்ட் ரகத்தில் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக செயிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி மாடல் வடிவத்தில் ஹூண்டாய் டூஸான் மற்றும் ஹோண்டா சிஆர்-வி மாடல்களை விட சற்று பெரிதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் விற்பனை செய்யப்படும் Roewe RX3 மாடல் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பெட்ரோல், டீசல் மாடல்களில் வரலாம். ஆனால், மேலதிக தகவல்கள் எதுவும் இப்போது வெளியிடப்படவில்லை.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

உலக அளவில் இந்தியா மிக முக்கிய மார்க்கெட்டாக கருதுகிறோம். அதேநேரத்தில், இந்தியாவில் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் திறம்பட செயல்பட்டு வருவதால், அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டு திட்டங்களை வகுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறந்த தயாரிப்பு, சரியான விலை மற்றும் விற்பனை கொள்கை திட்டங்கள் மூலமாக சந்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

மின்சார கார்கள்

வரும் 2020ம் ஆண்டில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செயிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்திய மின்சார கார் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை துவங்கி வைக்கும்," என்று செயிக் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவு செயல் இயக்குனர் மைக்கேல் யாங் கூறி இருக்கிறார்.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார்கள், சீனா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களில் வடிவமைக்கப்படும். பின்னர், இந்திய நிலைகளுக்கு ஏற்ப, இந்தியாவை சேர்ந்த பொறியாளர் குழு மாற்றங்களை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

குஜராத்தில் தொழிற்சாலை

குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை கையகப்படுத்தி இருக்கும் செயிக் குழுமம், அங்கு எம்ஜி கார் மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், போட்டியாளர்களைவிட சவாலான விலையில் தருவதற்காக, ஆலை வளாகத்திலேயே உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலைகளையும் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

இதனால், எம்ஜி மோட்டார்ஸ் கார்கள் அதிக அளவில் உள்நாட்டு உற்பத்தி உதிரிபாகங்களுடன் வர இருக்கிறது. சீனாவை சேர்ந்த தனது நம்பிக்கைக்குரிய உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களையே இந்தியாவில் சப்ளையர்களாக நியமிக்கவும் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எம்ஜி மோட்டார்ஸ் கார்களில் குறைந்தது 75 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு தயாரிப்பு உதிரிபாகங்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இது நிச்சயம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், சரியான விலையில் தயாரிப்புகளை இந்தியர்களுக்கு வழங்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஆண்டுக்கு 80,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதனை ஆண்டுக்கு 2,00,000 கார்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். எம்ஜி மோட்டார்ஸ் மட்டுமின்றி, செயிக் நிறுவனத்தின் ஹூவாயூ என்ற முக்கிய உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தையும் இந்தியாவில் களமிறக்க உள்ளோம் என்று செயிக் குழுமம் தெரிவித்துள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

உயர்ந்த நோக்கம்

உயர்தர தயாரிப்புகளை சரியான விலையிலும், குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்டதாக இந்தியர்களுக்கு வழங்கும் நோக்குடன் களமிறங்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறந்த மறுவிற்பனை மதிப்பு, வாரண்டியையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

முதல்கட்டமாக எம்ஜி மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருக்கும் பெட்ரோல், டீசல் கார் மாடல்களில் 75 சதவீதம் உள்ளூர் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படும். பின்னர், இந்த அளவு வெகுவாக அதிகரிக்கப்படும். அதேபோன்று, எலெக்ட்ரிக் கார்களை குறைவான எண்ணிக்கையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், வரவேற்பை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

டீலர் நெட்வொர்க்

இந்தியயாவில் முதல்கட்டமாக 45 டீலர்கள் மற்றும் 100 சேவை மையங்களுடன் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ். முதல் மாடல் வருவதற்கு முன்பாக இந்த மையங்கள் செயல்பட துவங்கும். அத்துடன், சிறந்த பின்புலம் கொண்ட டீலர்களை தேர்வு செய்து திறப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பின் சிறந்த சேவையை அளிக்கும் விதத்தில் 24 மணிநேர உதவி மையத்தையும் நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளது. வெறும் 10 நிமிடங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீர்வு அல்லது உதவி கிடைக்கும் விதத்தில் இந்த சேவை மையம் செயல்படும்.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

அதிரடி திட்டம்

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தை வெற்றியடைய வைப்பதற்காக மின்சார வாகனம், கார் ஷேரிங் திட்டம், நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட நான்கு முனை கொள்கைகளை மனதில் வைத்து செயிக் மோட்டார்ஸ் செயலாற்றி வருகிறது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை காரணமாக, கார் ஷேரிங் திட்டம் அமோக வெற்றி கண்டுள்ளது. சீனாவை போன்றே இந்தியாவிலும் மக்கள் தொகை அதிக என்பதால், இந்த கார் ஷேரிங் திட்டம் வெற்றி பெறும் என்று செயிக் கருதுகிறது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

எம்ஜி மோட்டாரஸ் பற்றி...

இங்கிலாந்தை சேர்ந்த மோரிஸ் கராஜஸ் என்பதன் சுருக்கமாக எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனமாக அழைக்கப்படுகிறது. 2005ம் ஆண்டு சீனாவை சேர்ந்த ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்(தற்போது செயிக்) நிறுவனம் எம்ஜி ரோவர் குழுமத்தின் ரோவர் 25 மற்றும் ரோவர் 75 மாடல்களை உரிமத்தை கையகப்படுத்தியது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

எம்ஜி ரோவர் குழுமத்தின் உற்பத்தி தளவாடங்கள், எந்திரங்களை சீனாவை சேர்ந்த நான்ஜிங் ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன்(NAC) கையகப்படுத்தியது. பின்னர், NAC MG என்ற புதிய நிறுவனமாக பெயர் மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் 2008ம் ஆண்டு செயிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

சீன அரசின் தலையீட்டுக்கு பின்னர், SAIC மற்றும் NAC MG நிறுவனங்கள் இணைந்து கார் மாடல்களை உருவாக்கி தம்தமது பிராண்டுகளில் விற்பனை செய்கின்றன. SAIC நிறுவனம் எம்ஜி மோட்டார்ஸ் மாடல்களை தயாரித்து Roewe Marque என்ற புதிய பிராண்டில் சீனாவில் விற்பனை செய்கிறது. இதே மாடல்கள் MG Motors பிராண்டில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

ரோவர் பிராண்டு பெயர் மற்றும் சின்னத்திற்கான உரிமம் ஃபோர்டு நிறுவனத்தின் வசம் உள்ளது. எனவே, புதிய பிராண்டு பெயர் மற்றும் பிராண்டு சின்னங்களில் இந்த கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமங்களில் ஒன்றாக SAIC குழுமம் செயல்ப்டு வருகிறது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

முன்னணி நிறுவனம்

2011ம் ஆண்டு 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்துடன் கூட்டணி வைத்து ஷாங்காய் GM என்ற பெயரிலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்துடன் கூட்டணி அமைத்து ஷாங்காய் VW என்ற பெயரிலும் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

கார்கள் மட்டுமின்றி, வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனத் தயாரிப்பு துறைகளில் SAIC ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தனது பயணிகள் வாகனத் தயாரிப்பு பிரிவு மூலமாக இந்தியாவிலும் கால் பதிக்க தயாராகி வருகிறது. சீனாவை போலவே அதிக மக்கள் தொகை மிகுந்த இந்தியாவிலும் பெரிய அளவிலான திட்டத்துடன் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு SAIC குழுமம் அதீத நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

Most Read Articles
English summary
MG Motors has announced its plans to launch their first product in India in the second quarter of 2019. The SIAC-owned car manufacturer's first product will be a C-segment SUV followed by an all-electric SUV in 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X