58 கிமீ மைலேஜ் தரும் புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி அறிமுக தேதி!!
2018 மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் வரும் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஹைப்ரிட் மாடல் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஸ்யூவியின் 2.0 லிட்டர் ப
2018 மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் வரும் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் முகப்பு மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா லெக்சஸ் சொகுசு கார்களின் முகப்பின் சாயலை பெற்றிருக்கிறது.

எல்இடி ரஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், சில்வர் ஸ்கப்ஃப் பிளேட் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. இரண்டு க்ரோம் பட்டை மற்றும் மிட்சுபிஷி லோகோ ஆகியவை முகப்பை அலங்கரிக்கின்றன.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியானது 4,695 மிமீ நீளமும், 1,810மிமீ அகலமும், 1,710மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,670மிமீ ஆக உள்ளது. மேலும், 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. இந்த காரில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், பவர் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் என்று பல்வேறு பிரிமியம் காருக்குரிய வசதிகளையும் அளிக்கும்.

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது. 3 நிலைகளில் இயங்கும் அடாப்டிவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், ஹைப்ரிட் கார்களுக்கான விசேஷ கணக்கீடுகளின்படி லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தரும் என்பதுதான் எதிர்பார்ப்பை எகிற செய்யும் விஷயம்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இணையான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








