விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

புதிய மிட்சுபிஷி பஜேரோ எஸ்யூவிக்கு பல்வண்ண கலவையில் தேர்வு செய்யும் வாய்ப்பு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி, 30 வகையான பல்வண்ண கலவை தேர்வு மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவிக்கு வழங்கப்படுகி

By Saravana Rajan

புதிய மிட்சுபிஷி பஜேரோ எஸ்யூவிக்கு பல்வண்ண கலவையில் தேர்வு செய்யும் வாய்ப்பு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

எஸ்யூவி மார்க்கெட்டில் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் சிறந்த மாடலாக இருந்தாலும், வாடிக்கையாளர் சேவை மற்றும் டீலர் நெட்வொர்க் போன்ற விஷயங்களில் வலுவாக இல்லை. இதனால், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனையில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

இந்த சூழலில், வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு விசேஷ வண்ணக் கலவை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மிட்சுபிஷி நிறுவனம். பஜேரோ ஸ்போர்ட் ஸ்ப்ளாஷ் என்ற பெயரில் இந்த பல்வண்ண கலவை தேர்வு திட்டம் வந்துள்ளது.

விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

இதன்படி, 30 வகையான பல்வண்ண கலவை தேர்வு மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவிக்கு வழங்கப்படுகிறது. மூன்று விதமான வண்ண தீம்களில் 5 இரட்டை வண்ணக் கலவைகளும் வழங்கப்படுகின்றன.

விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

வாடிக்கையாளர் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் பல்வண்ணக் கலவையுடன் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் டெலிவிரி கொடுக்கப்படும். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று மிட்சுபிஷி நம்புகிறது.

விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

இந்த சிறப்பு வண்ணக் கலவையை தவிர்த்து வேறு மாற்றங்கள் இல்லை. இந்த எஸ்யூவியில் 3.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் 175 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் மாடல் இணைக்கப்பட்டு இருக்கும் இதே எஞ்சின் 175 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் அளிக்கும்.

விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியானது 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. ஆஃப்ரோடு பிரியர்களுக்கும், பிரிமியம் எஸ்யூவி விரும்பிகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கிறது.

விதவிதமான வண்ணக் கலவையில் புதிய பஜேரோ ஸ்போர்ட் அறிமுகம்!!

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியானது ரூ.28.85 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள மிட்சுபிஷி டீலரை அணுகி கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 7, 2018, 14:49 [IST]
English summary
The Mitsubishi Pajero Sport has not been a seller in the Indian market. Now, to attract some interest towards the SUV, Mitsubishi has introduced the Pajero Sport Splash with custom colour options. The new Mitsubishi Pajero Sport Splash will offer a host of custom colour options.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+