இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் கலர் எது தெரியுமா?

Written By:

கார் வாங்கும்போது அதன் கலரை தேர்வு செய்வது மண்டை காயும் வேலையாக இருக்கும். சிலர் ராசி பார்த்து, சிலர் பாதுகாப்பு விஷயத்தை மனதில் வைத்தும், சிலர் நீண்ட நாள் உழைப்புக்கு தோதுவான வண்ணத்தையும் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் கலர் மற்றும் வெறுக்கும் கார் கலர்கள் குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

விருப்பமான கார் கலர்கள்

விருப்பமான கார் கலர்கள்

இந்தியர்களுக்கு அதிகம் விரும்பும் கலர்களில் வெள்ளை முதலிடம் பெறுகிறது. அடுத்து சில்வரும், கருப்பு வண்ணமும் இடம்பெற்று இருக்கின்றன. இந்தியர்களுக்கு மட்டும் என்றில்லை. உலக அளவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் வண்ணங்களும் இவைதான்.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் கலர் எது தெரியுமா?

வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு வண்ணங்களை தேர்வு செய்து வாங்குவதற்கு மிக முக்கிய காரணம், இந்த கலர்கள் மிக நீண்ட காலத்திற்கு மங்குவதில்லை. அதேபோன்று, பளபளப்புடன் கூடிய உயர்தர மெட்டாலிக் கலவையில் இந்த வண்ணங்கள் கூடுதல் மெருகுடன் நீண்ட காலத்திற்கு காருக்கு பொலிவை தருகின்றன.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் கலர் எது தெரியுமா?

இதுதவிர, பாலிஷ், வேக்ஸிங் மற்றும் செராமிக் கோட்டிங் போன்ற மெருகூட்டும் ரசாயனங்கள் மூலமாக இந்த வண்ணங்கள் உரிய பாதுகாப்பு வளையத்தை பெறும்போது கூடுதல் காலத்திற்கு அதிக பொலிவுடன் காட்சி தருகின்றன.

அதேநேரத்தில், கருப்பு வண்ண கார்கள் இந்த விஷயத்தில் பாதுகாப்பு குறைவு. ஆனால், நீண்ட காலத்திற்கு பொலிவுடன் இருப்பதே பலர் விரும்புவதற்கு காரணம். இந்தியாவில் 46 சதவீதம் அளவுக்கு வெள்ளை கார்களின் விற்பனை இருக்கிறது. 20 சதவீதம் அளவுக்கு சில்வர் நிற கார்கள் விற்பனையாகிறது.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் கலர் எது தெரியுமா?

சொகுசு கார்களை வாங்குவோர் கூட வெள்ளை வண்ணத்தையே பெரும்பாலும் தேர்வு செய்வதை பார்த்திருக்கலாம். வெள்ளை வண்ணம் அந்தஸ்தை உயர்த்துவதுடன், மறுவிற்பனை மதிப்பிலும் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம்.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் கலர் எது தெரியுமா?

அதேநேரத்தில், வெள்ளை மற்றும் சில்வர் வண்ண கார்களை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மழை உள்ளிட்ட நேரங்களில் சேறு, சகதி படியும்போது உடனுக்குடன் அதனை கழுவி சுத்தப்படுத்த வேண்டி இருக்கும்.

விரும்பாத கலர்கள்

விரும்பாத கலர்கள்

இந்தியர்கள் விரும்பாத கார் கலர்களை குறிப்பிட்டு கூற முடியாது. அதேநேரத்தில், நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் உள்ளிட்ட வண்ணங்களை இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வருகிறது.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் கலர் எது தெரியுமா?

எனினும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் கார் கலர் தேர்வு வேறுபடும். அதேநேரத்தில், ஒவ்வொரு காருக்கும் ஒரு வண்ணம் சிறப்பாக இருக்கும்.

சரி, விபத்துக்கள் ஏற்படுவதற்கு கார் கலரும் முக்கிய காரணியாக இருக்கிறது. அதுகுறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

விபத்தை தவிர்ப்பதற்கு அடிப்படையான ஆயுதம் என்ன தெரியுமா? வேறொன்றுமில்லை. காரின் வண்ணம்தான் அது. விபத்துக்கும், காரின் வண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்பது நியாயம்தான். ஆனால், நிச்சயம் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆம், வெளிர் நிற கார்களைவிட அடர் வண்ண கார்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அடர் வண்ண கார்கள் எளிதில் புலப்படாததுதான் காரணம்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

குறிப்பாக, இரவு நேரங்களில் ஹெட்லைட் ஒளியில் அடர் வண்ண கார்களைவிட வெள்ளை வண்ணக் கார்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும். இரவு நேரங்களில் கருப்பு, நீலம், சாம்பல் வண்ண கார்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரிவதில்லை என்பது பல ஆய்வுகள் மூலமாக நிரூபணமாகியிருக்கிறது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

இன்ஸ்யூரன்ஸ் இழப்பீடு தொடர்பான ஆய்வுகளில் வெள்ளை, மஞ்சள் போன்ற வெளிர் நிற கார்களைவிட கருப்பு, நீலம், சாம்பல் உள்ளிட்ட வண்ணக் கார்கள் அதிகம் சிக்கியிருப்பதாக தெரிவிக்கின்றன.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தின் கார் விபத்து புள்ளிவிபரங்களை எடுத்து அந்நாட்டை சேர்ந்த மோனாஷ் பல்கலைகழகத்தின் விபத்து ஆராய்ச்சி மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது, வெள்ளை நிற கார்களுடன், இதர வண்ணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

அப்போது, கருப்பு, நீலம், சாம்பல், பச்சை, சிவப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ண கார்கள் வெள்ளை வண்ணக் கார்களைவிட அதிகம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது தெரிய வந்தது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

அதாவது, சிறந்தது வெள்ளை நிறம் மட்டுமே என்ற கருத்தை தெரிவித்தனர். வெள்ளையுடன் ஒப்பிடும்போது சில்வர் வண்ணக் கார்கள் 50 சதவீதம் அளவுக்கு விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக மற்றொரு பொது கூற்றையும் உடைத்துள்ளனர்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வெள்ளை நிற கார்களை நிறுத்தியிருந்தாலும், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தூரத்திலிருந்தே கார் நிற்பது புலனாகும். வெள்ளை நிற கார்களில் மற்றொரு பயனும் இருக்கிறது. சென்னை போன்ற படு ஹாட்டான தட்பவெப்ப நிலை கொண்ட ஊர்களுக்கு வெள்ளை வண்ணக் கார்கள் சிறந்தது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஏனெனில், சூரிய ஒளியை வெள்ளை வண்ணம் பிரதிபலிக்கும் வாய்ப்பு இருப்பதால், ஏசியிலிருந்து வரும் குளிர்ச்சி சிறப்பாக இருக்கும். காருக்கள் அதிக வெப்பம் கடத்தப்படாது. ஏன் இரவு நேரங்களில் தெருவில் நிறுத்தியிருந்தால்கூட, நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும்.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

வெள்ளை நிற கார்களை பலர் தவிர்ப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அதனை பராமரிப்பது சற்று சிரமம் என்பதாகத்தான் இருக்கும். மேலும், சாம்பல் வண்ண கார்கள் சற்று பிரிமியமாக தோற்றமளிப்பதும் வாடிக்கையாளர்களை தேர்வு செய்ய தூண்டுகிறது.

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

ஆனால், இதில் இருக்கும் அடிப்படை பாதுகாப்பு விஷயத்தை புரிந்து கொண்டால் பிரச்னை இருக்காது. பயணங்களும் மகிழ்ச்சியாக அமையும். பாதுகாப்பு கருதி மாருதி உள்ளிட்ட சில நிறுவனங்கள் கருப்பு வண்ணக் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are some of the most liked and hated car colours in India!

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark