இந்தியாவின் அதி நம்பகமான கார் நிறுவனங்கள்... பட்டியலில் ஹோண்டாவுக்கு கீழே மாருதி!!

இந்தியாவின் மிகவும் நம்பகமான கார் பிராண்டுகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், டாடா, ஹோண்டா, மாருதி, பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் முன்னிலை பெற்றிருக்கின்றன. விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலா

By Saravana Rajan

இந்தியாவின் மிகவும் நம்பகமான கார் பிராண்டுகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், டாடா, ஹோண்டா, மாருதி, பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் முன்னிலை பெற்றிருக்கின்றன. விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரம், சர்வீஸ் மற்றும், விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் உள்ளிட்ட அம்சங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்டு ஆராய்ந்து, அதன்படி முன்னணி நிறுவனங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது டிரஸ்ட் அட்வைசரி அமைப்பு. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

இதில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கும் கார் நிறுவனங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

ஆட்டோமொபைல் பிரிவில் ஹோண்டா கார் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த நிறுவனங்களின் பொதுப் பிரிவு பட்டியலில் 7வது இடத்தை ஹோண்டா கார் நிறுவனம் பிடித்துள்ளது.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பிரிவில் 6வது இடத்தில் இருந்த ஹோண்டா கார் நிறுவனம் இந்த ஆண்டு ஒரு இடம் சறுக்கி 7வது இடத்தில் இருக்கிறது. எனினும், ஆட்டோமொபைல் பிரிவு என்று வரும்போது தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

இரண்டாவது இடத்தில் மாருதி கார் நிறுவனம் உள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்த நிறுவனங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த மாருதி நிறுவனம் இந்த ஆண்டு 3 இடங்கள் சறுக்கி 10வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

இந்த பட்டியலில் கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு 45 வது இடத்தில் இருந்த பிஎம்டபிள்யூ 30 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 15வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. சொகுசு கார் பிரிவில் பிஎம்டபிள்யூ முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

ஒட்டுமொத்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் உள்ளடக்கிய டாடா குழுமம் 4வது இடத்தில் இருக்கிறது. இது பொதுப்பிரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

இருசக்கர வாகனப்பிரிவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம் இந்த ஆண்டு 16வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், இருசக்கர வாகனப் பிரிவில் பஜாஜ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

நாடு முழுவதும் 16 நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 9,000 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,000 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

இந்த 1,000 நிறுவனங்இந்த பட்டியல் 15,000 மணி நேர மனித உழைப்பில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக டிரஸ்ட் அட்வைசரி அமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு அம்சங்களையும், தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த பட்டியலில் மாருதி விஞ்சி ஹோண்டா முன்னிலை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

இந்தியாவின் நம்பகமான கார் நிறுவனங்கள்!!

அதுபோன்று, சொகுசு கார் பிரிவில் பிஎம்டபிள்யூ முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த ஆய்வு குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஆனால், பெருவாரியான வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆய்வு நடத்தும்போது இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்று கட்டாயம் கூறலாம்.

Source: Adage India

Most Read Articles
English summary
Tata, Maruti, Honda and BMW among the Most Trusted Brands In India 2018. The list was shared by the Trust Advisory (TRA) of India. Samsung tops the entire list, while Tata (as a diversified company) ranks ahead of the other automotive brands. Bajaj (another diversified brand) has also made its way to the list.
Story first published: Monday, April 23, 2018, 17:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X