இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

இனி சாலையில் பயணம் செய்கையில் தப்பி தவறி கூட இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். இல்லாவிட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இனி சாலையில் பயணம் செய்கையில் தப்பி தவறி கூட இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். இல்லாவிட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். வாகன ஓட்டிகளை சிறையில் அடைப்பதற்காக போலீசார் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் என்பது பெயரளவிற்குதான் இருக்கிறது. பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதே கிடையாது. சாலை விபத்துக்களின் காரணமாக, உலக அளவில் அதிக உயிர்களை பறி கொடுக்கும் நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு இதுவே காரணம்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து, வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, குடி போதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது என நம்மவர்களின் போக்குவரத்து விதிமுறை மீறல்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

இந்த வகையில் நம்மவர்கள் செய்யும் முக்கியமான போக்குவரத்து விதிமீறல் நடைபாதையில் (Footpath) வாகனம் ஓட்டுவது. பாதசாரிகள் நடந்து செல்வதற்கு என சாலையில் இருபுறமும் ஆங்காங்கே நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

முழுக்க முழுக்க பாதசாரிகள் நடந்து செல்வதற்காக மட்டுமே இந்த நடைபாதைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் நடைபாதையிலும் வாகனத்தை ஓட்டி செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் விரைவாக செல்ல வேண்டும் என்ற காரணங்களுக்காகவே, பெரும்பாலான வாகன ஓட்டிகள் இப்படி விதிமுறைகளை மீறி, நடைபாதையில் பயணம் செய்கின்றனர்.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த பிரச்னை உள்ளது. பாதசாரிகளின் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவதால், அவர்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் தவிக்கின்றனர். அத்துடன் விபத்து நிகழ்வதற்கான அபாயங்களும் உள்ளது.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

பாதசாரிகள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டக்கூடாது என போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எதற்கும் இதுவரை உரிய பலன் கிடைக்கவில்லை.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

அபராதம் விதித்தாலும் வாகன ஓட்டிகள் அதனை எளிதாக செலுத்தி விடுகின்றனர். அத்துடன் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். எனவே இதனை எப்படி கட்டுப்படுத்துவது என யோசித்த போலீசார், தற்போது சிறை தண்டனை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

ஆம், நடைபாதையில் வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 279ன் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

பெங்களூரு நகர போலீசார்தான் தற்போது இந்த அதிரடியான நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். ஏனெனில் நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த பிரச்னை இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூருவில்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ''பல்வேறு வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், நடைபாதையில் வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவேதான் தற்போது இந்த நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளோம்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

இந்த வார இறுதிக்குள் குறைந்தபட்சம் 500 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் நடைபாதையில் வாகனங்களை செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான எச்சரிக்கையை விடுப்பதே எங்களின் நோக்கம்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

இனிமேல் நடைபாதையில் வாகனங்களை செலுத்துவதற்கு முன்பாக வாகன ஓட்டிகள் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, நடைபாதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியும்'' என்றனர்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

பெங்களூர் மிரர் வெளியிட்டுள்ள செய்தியின்படி, காலை மற்றும் மாலை நேரங்களில்தான் வாகன ஓட்டிகள் இந்த தவறை அதிகம் செய்கின்றனர். குறிப்பாக மடிவாலா, கோரமங்களா, ஆடுகோடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் நடைபாதையில் பயணம் செய்து வருகின்றனர்.

இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...

தற்போது சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படுவதால், வருங்காலங்களில் நடைபாதையில் வாகனங்களை செலுத்தும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பு. பாதசாரிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் அதுவே.

Most Read Articles

ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Motorists Who Drive a Vehicle On The Footpath Will Now Face 6 Months Jail Term In Bengaluru
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X