புதிய ஹோண்டா அமேஸ் காரை முதலில் முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு விலை!!
புதிய ஹோண்டா அமேஸ் காரை முன்பதிவு செய்வோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரை முன்பதிவு செய்யும் முதல் 20,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுகச் சலுகை விலையில்
வரும் மே 16ந் தேதி புதிய ஹோண்டா அமேஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மாருதி டிசையர் காருக்கு சரிக்கு நிகரான மாற்று மாடல் என்பதால், வாடிக்கையாளர் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், புதிய ஹோண்டா அமேஸ் காரை முன்பதிவு செய்வோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரை முன்பதிவு செய்யும் முதல் 20,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுகச் சலுகை விலையில் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.

அதன்பிறகு, புதிய ஹோண்டா அமேஸ் காரின் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரை முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.21,000 முன்பணம் செலுத்தி, உடனடியாக அருகிலுள்ள ஹோண்டா டீலர்ஷிப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். தவிர்த்து, சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற டிசைன் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். 15 அங்குல அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

உட்புறத்தில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. உட்புறத்தில் இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ணக் கலவை இன்டீரியர் கவர்கிறது.

புதிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

புதிய ஹோண்டா அமேஸ் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி டிசையர் மற்றும் ஹூண்டாய் எக்ஸென்ட் கார்களுக்கு போட்டியாக வர இருக்கிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








