புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் கடந்த சில மாதங்களாக தீவிர சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

இந்த நிலையில், இந்த புதிய கார் வருகை குறித்த விபரத்தை மோட்டார்ஆக்டேன் தளம் வெளியிட்டு இருக்கிறது. வருகிற மே மாதம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்த தளம் தெரிவித்துள்ளது.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் வடிவமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய க்ரில், பம்பர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்று இருக்கிறது. டெயில் லைட்டுகளும் புதிது.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

புதிய ஹூண்டாய் க்ரெ்டடா காரில் 8 அங்குல தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும். நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு, சென்டர் கன்சோலிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் சன்ரூஃப் இடம்பெற இருக்கிறது. மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். முன்புறத்தில் வென்டிலேட்டட் இருக்கைகள் இடம்பெற இருப்பதாகவும் தகவல் உள்ளது.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

தற்போது பயன்படுத்தப்படும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில்தான் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரும் வர இருக்கிறது.

 புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிதபட்சமாக 121 பிஎச்பி பவரையும், , 154 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 224 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

தற்போதைய மாடலைவிட சற்று கூடுதலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இந்த புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும் என்பதால், ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

Article Published On: Thursday, March 22, 2018, 13:07 [IST]
English summary
The new 2018 Hyundai Creta is all set to launch in May. According to reports from MotorOctane, the new Creta facelift will be seen on the roads in a few months time.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+