புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

Written By:

பட்ஜெட் கார் பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ. கால மாற்றத்துக்கு ஏற்றாற்போல் புதிய மாடல்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில், சான்ட்ரோ காருக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் விடை கொடுத்தது. ஆனால், சான்ட்ரோ கார் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய மாடலை களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்தது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

இதற்காக, ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு நிகரான புத்தம் புதிய கார் மாடலை ஹூண்டாய் தயாரித்துள்ளது. இதனை சான்ட்ரோ பெயரிலேயே விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

பட்ஜெட் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த புதிய சான்ட்ரோ காரை வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

பழைய சான்ட்ரோ காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதாவது, பிராண்டு பெயர் மட்டுமே சான்ட்ரோவாக இருக்கும். மற்றபடி, புத்தம் புதிய கார் மாடலாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

வெளித்தோற்றம் மிக கவர்ச்சிகரமாக இருககும். அதேபோலவே, உட்புறத்திலும் அதற்கு இணையான சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இந்த காரில் தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஓட்டுனருக்கான ஏர்பேக் மற்றும் டிஜிட்டல் திரை மற்றும் அனலாக் மீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமெனட் கன்சோல் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

ஹூண்டாய் ஐ10 காரைவிட உயரத்திலும், அகலத்திலும் கூடுதலாக இருக்கும் என்பதால், உட்புறத்தில் நெருக்கடி இல்லாத உணர்வை அளிக்கும். பட்ஜெட் ரகத்தில் இந்த கார் மிகச் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும் என்பது மிக முக்கிய அம்சமாக இருக்கும். வாட்டர் பாட்டில் போன்றவை வைப்பதற்கு அதிக ஸ்டோரேஜ் இடவசதியும் இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும் 100 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. புதிய மாடல் லிட்டருக்கு 22 கிமீ வரை மைலேஜ் தர வல்லதாக இருக்கும் என்பதும் இப்போது கிடைத்திருக்கும் தகவல்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

கடந்த ஒரு சில ஆண்டுகளாக சான்ட்ரோ பிராண்டு மார்க்கெட்டில் இருந்து விலக்கப்பட்டு இருந்தாலும், மீண்டும் புத்தம் புதிய மாடலாக வர இருப்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய முக்கிய விபரங்கள்!

ரூ.3.5 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
New 2018 Hyundai Santro: 8 Things To Know.
Story first published: Tuesday, March 6, 2018, 10:29 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark