மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடல் வருகை விபரம்!

மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடல் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

இந்தியாவில் மாருதி வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற கச்சிதமான மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடலை 2012 ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்த மாடலில் 3 வரிசை இருக்கை அமைப்புடன் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷிய ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக சுஸுகி சோலியோ என்ற பெயரில் ஜப்பானில் விற்பனையில் இருக்கும் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய மண்ணில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

எனினும், இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கருதப்பட்டது. இந்த சூழலில், வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

மாருதி வேகன் ஆர் காரின் அடிப்படையிலான இந்த 7 சீட்டர் மாடல் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. எனவே, இந்த 7 சீட்டர் காரை மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

நேர் போட்டியாளராக கருதப்படும் டட்சன் கோ ப்ளஸ் காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், மாருதி நிறுவனத்தின் நம்பகமான மாடலாக கருதப்படும் வேகன் ஆர் பிராண்டில் இந்த கார் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் சுஸுகி சோலியோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹைப்ரிட் வெர்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் சுஸுகி ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இந்த கார் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

இந்த புதிய மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாருதி களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்திய வருகை விபரம் வெளியானது!

மாருதி நிறுவனத்தின் பட்ஜெட் விலை எம்பிவி காராக இருக்கும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பை கிளறியிருக்கிறது. ஆனால், இந்த கார் அறிமுகம் குறித்து மாருதி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
Maruti has confirmed the seven-seater WagonR-based Solio for India. According to reports from Team-BHP, the production of the new seven-seater Wagon R will begin from September 2018.
Story first published: Tuesday, March 27, 2018, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X