2018ல் இந்திய வகானத்துறையை புதியதாக ஆக்கிரமிக்கவுள்ள டாப் 5 நிறுவனங்கள் இவைதான்..!!

By Azhagar

இந்திய வாகனத்துறை ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சுமார் 9 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சியடைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் 5வது பெரிய வாகன சந்தையாக இந்தியா உள்ளதாக 2016ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

இந்த நிலை தொடர்ந்தால் 2020ம் ஆண்டில் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை உணர்ந்து உலகளவில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில்தொடர்ந்து கால்பதித்து வருகின்றன.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

அந்த வகையில் 2018ல் இந்திய வாகன சந்தையில் அறிமுகமாகும் புத்தம் புதிய வாகன தயாரிப்பு நிறுவனங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

கியா

கியா

இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஹூண்டாய். இதனுடைய துணை நிறுவனம் தான் இந்த கியா. ஹூண்டாயை போலவே கியாவும் தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு தான் இந்தியாவில் இயங்கவுள்ளது.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

இந்தியாவிற்கு ஏற்றவாறு கியா தயாரித்திருக்கும் கார்கள், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதில் கிடைக்கும் வரவேற்பை வைத்து, பிறகு ஆய்வு செய்து, கியாவின் கார்கள் 2019ம் ஆண்டில் நம் நாட்டில் விற்பனைக்கு வரும்.

Trending On Drivespark:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம் வெளியானது!

110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..!!

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

இந்திய சந்தைக்கு ஏற்ற கார்களை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்திருந்தாலும், கியாவின் குறிக்கோள் எந்த கார் செக்மென்டில் உள்ளது என இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையில் ஹூண்டாய் ப்ரீமியம் ரக கார் தயாரிப்பில் இறங்க, சிறிய ரக மாஸ் மார்கெட் சந்தையை கியா கைப்பற்றும் என தெரிகிறது.

Recommended Video - Watch Now!
2018 Audi A7 Sportback Details - DriveSpark
வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

அதை தொடர்ந்து சப்-ஃபோர் காம்பேக்ட் எஸ்யூவி, ப்ரீமியம் ஹேட்ச்பேக், சிறியளவிலான என்ட்ரி-லெவல் செக்மென்டுகளிலும் அடுத்தடுத்து கியா கார்களை தயாரிக்கவுள்ளது.

இந்நிறுவனத்தின் கார்கள் பெரும்பாலும், இந்தியாவின் முன்னணி கார் மாடல்களாக இருக்கும் மாருதி சுஸுகியின் பிரிஸ்ஸா, பலேனோ, ஆல்டோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: நவம்பர் / டிசமர் 2018

எம்.ஜி மோட்டார்

எம்.ஜி மோட்டார்

பிரிட்டன் நாட்டை சேர்ந்த எம்.ஜி மோட்டார் நிறுவனத்தை சீனாவை சேர்ந்த சயாக் கைப்பற்றியுள்ளது. 93 வருட பாரம்பரியம் கொண்ட இந்நிறுவனம் 2018ல் இந்தியாவில் கால்பதிப்பது உறுதியாகியுள்ளது.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

குஜராத்தின் ஹலோல் பகுதியில் இயங்கி வந்த ஜெனரல் மோட்டார்ஸின் கார் தயாரிப்பு ஆலையை, எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கைவசப்படுத்தியுள்ளது.

இதில் எம்.ஜி மோட்டார்ஸ் இசட்.எஸ் காம்பேக்ட் எஸ்யூவி காரை தயாரித்து விற்பனைக்கு வெளியிடுகிறது. இந்த மாடல் கார் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரென்லாட் டஸ்டர் கார்களுக்கு போட்டியாக அமையும்.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

இதுதவிர எம்ஜி3 என்ற ஹேட்ச்பேக் மாடல் காரையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. இது மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் / ஜூலை 2018

நார்டன்

நார்டன்

பிரிட்டன் நாட்டின் பாரம்பரிய பைக் தயாரிப்பு நிறுவனமான நார்டன், மார்டன் கிளாசிக் செக்மென்டில் இந்தியாவில் கால்பதிக்கவுள்ளது.

முதற்கட்டமாக லிமிடெட் எடிசன் மோட்டார் சைக்கிள்களை சிபியூ கீழ் இந்தியாவில் நார்டன் கொண்டு வருகிறது.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பு பாகங்கள் கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த நார்டன் பைக் 2019ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இந்தியாவில் தனது கமாண்டோ மற்றும் டாமினேட்டர் மாடல் பைக்குகளை தயாரிக்க நார்டன், கைனடிக் உடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

கைனடிக்கின் அஹமத்நகர் ஆலையில் நார்டனின் கமான்டோ 961 ஸ்போர்ட் மற்றும் கமான்டோ 961 கஃபே ரேஸர் பைக்குகள் தயாரிக்கப்படவுள்ளன.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: நவம்பர் / டிசம்பர் 2018

எஸ்.டபுள்யூ.எம்

எஸ்.டபுள்யூ.எம்

இப்படியொரு பெயரையும், பிராண்டையும் நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். ஸ்பீடி வொர்க்கிங் மோட்டார் சைக்கிள்ஸ் (Speedy Working Motorcycles) என்ற வார்த்தைக்கான சுருக்கம் தான் எஸ்.டபுள்யூ.எம்.

Trending On Drivespark:

சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு ஆப்பு வைக்க புதிய அவென்ச்சர் 180 மாடலை வெளியிடும் பஜாஜ்..!!

சீனாவின் இந்த பறக்கும் காரை ஓட்ட விமானியும் தேவையில்லை... விமானிக்கான உரிமும் தேவையில்லை..!!

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம், இந்தியாவின் சூப்பர்டூயல் டி, நடுத்தர அட்வென்ச்சர் டூரர் பைக்குகளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

600சிசி திறன் பெற்ற எஞ்சின்களில்

எஸ்.டபுள்யூ.எம் பைக்குகள் தயாராகவுள்ளன. மேலும் இவற்றின் மதிப்பு ரூ. 6 லட்சம் என்ற அளவுகோளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

நார்டன் போலவே, எஸ்.டபுள்யூ.எம் சூப்பர்டூயல் டி பைக்குகள் கைனடிக்கின் மஹாராஷ்டிரா ஆலையில் தயாராகவுள்ளன. இதனுடைய அட்வென்ச்சர் டூரர் பைக் இரண்டு வேரியண்டுகளில் வெளிவரவுள்ளன.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

அட்வென்ச்சர் டூரர் பைக் ’டி’ என்ற டூரிங் வெர்ஷனிலும் மற்றும் ’எக்ஸ்’ என்ற மாடல் ஆஃப்-ரோடு வெர்ஷனிலும் வெளியிடப்படவுள்ளன.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு : ஜனவரி - மார்ச் 2018

ஜாவா

ஜாவா

90களில் இந்தியாவில் மிகப்பெரிய பரபரப்பாக விற்பனையான பைக் பிராண்டுகளில் ஒன்று ஜாவா. தற்போது இது விற்பனையில் இல்லை என்றாலும், ஜாவா பைக்குகளுக்கான ஆர்வலர் வட்டம் இன்னும் அப்படியே இருக்கின்றன.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

சமீபத்தில் ஜாவா-வை கைப்பற்றிய மஹிந்திரா, தனது மோஜோ எஞ்சின்களை ஜாவா பெயரில் வெளிவரும் பைக்குகளில் பொருத்தவுள்ளது.

உலக நாடுகள் சிலவற்றில் இன்னும் பிரபலமாக உள்ள ஜாவா 350 ஓஹெச்சி என்ற மாடல் பைக்கை மஹிந்திரா மீண்டும் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு : நவம்பர் / டிசம்பர் 2018

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் வாகனங்களில் திருப்தி படுத்துவது கொஞ்சம் சிரமம் தான். அது சில நிறுவனங்களுக்கு கைகூடாமல் போனதால் தான், தோல்வியை தழுவின.

வாகன விற்பனையில் புதியதாக கால்பதிக்கும் டாப் 5 நிறுவனங்கள்!

ஆனால் ஒருமுறை ஒரு நிறுவனம் தனது தயாரிப்பின் மூலம் இங்குள்ள வாடிக்கையாளர்கள் கவர்ந்து விட்டால், அந்நிறுவனம் தான் பல ஆண்டுகளுக்கு ராஜா. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Tamil
English summary
Read in Tamil: New Car and Bike Manufacturers To Enter India In 2018. Click for Details...
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more