ஃபெராரி ஃபோர்ட்டோஃபினோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
ஃபெராரி போர்ட்டோஃபினோ ஸ்போர்ட்ஸ் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபெராரி நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக வந்திருக்கும் இந்த காருக்கு ரூ.3.5 கோடி விலை நிர்ணயிக்கப்
ஃபெராரி போர்ட்டோஃபினோ ஸ்போர்ட்ஸ் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபெராரி நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக வந்திருக்கும் இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபெராரி கலிஃபோர்னியா - டி காருக்கு மாற்றாக இந்த புதிய போர்ட்டோஃபினோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஃபெராரி நிறுவனத்தின் 70-ம் ஆண்டு விழாவின்போது இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. அந்நாட்டிலுள்ள மீன்பிடி திருவிழா நடத்தப்படும் கிராமத்தின் பெயரை இந்த காருக்கு சூட்டி இருக்கிறது ஃபெராரி.

இது ஹார்டு டாப் கொண்ட கன்வெர்ட்டிபிள் ரக கார் மாடலாக வந்துள்ளது. பிரம்மாண்டமான பானட், பூமராங் வடிவிலான கச்சிதமான எல்இடி ஹெட்லைட், பெரிய சக்கரங்கள் என கலிஃபோர்னியா டி காரைவிட வசீகரமாக இருக்கிறது போர்ட்டோஃபினா கார்.

இந்த கார் முற்றிலும் புதிய சாஸியில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கலிஃபோர்னியா டி காரைவிட இந்த காரின் சாஸி 35 சதவீதம் அளவுக்கு கூடுதல் உறுதித்தன்மை வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எடை 80 கிலோ வரை குறைவு.

புதிய ஃபெராரி போர்ட்டோஃபினோ கார் 2+2 இருக்கை அமைப்பு கொண்டது. பின் இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமரும் அளவுக்கு இடவசதி உள்ளது. உட்புறத்தில் 10.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே செயலியுடன் இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெற முடியும்.

இந்த காரில் 18 நிலைகளில் மாற்றும் வசதி கொண்ட எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் இருக்கை வசதி உள்ளது. பின்புற பயணிககளுக்கு 8.8 அஹ்குல தொடுதிரையும் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.

இந்த காரில் இருக்கும் ஹார்டு டாப் கூரையை 40 கிமீ வேகத்திற்குள் செல்லும்போது, வெறும் 14 வினாடிகளில் திறக்கவும், மூடவும் முடியும். கேபினுக்குள் காற்று புகுவதை தவிர்ப்பதற்காக விண்ட் டிஃப்லெக்டர் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பழைய கலிஃபோர்னியா டி காரில் இருந்த அதே 3.9லிட்டர் வி8 எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய ஃபெராரி போர்ட்டோஃபினோ கார் ரூ.3.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் உள்ள செலக்ட் கார்ஸ் மற்றும் மும்பையில் உள்ள நவ்னீத் மோட்டார்ஸ் ஆகிய டீலர்கள் வழியாக இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications